உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., கூட்டணி ஆட்சியில் இ.பி.எஸ்., தான் முதல்வர்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்!

பா.ஜ., கூட்டணி ஆட்சியில் இ.பி.எஸ்., தான் முதல்வர்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவாரூர்: ''தமிழகத்தில் எங்களுக்கு கூட்டணி கட்சிகளுடைய ஆட்சி. தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தான்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து திருவாரூரில் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது: எங்களுக்கு கூட்டணி கட்சிகளுடைய ஆட்சி. தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தான். நான் ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளை வைத்து இருந்தேன். எல்லா அணியும் (கட்சி) ஒன்றாக சேர வேண்டும். எல்லா கட்சிகளும் ஒரணியில் திரள வேண்டும் என்று சொல்லி இருந்தேன். இதில் யாருக்கு லாபம், நஷ்டம் என்பது தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்.தே.மு.தி.க.,வும் எங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும். அப்போது தான் தி.மு.க.,வை வெற்றி பெற முடியும். அதாவது நீங்கள் பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருக்கும். நான் பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருக்கும். அமித்ஷா எங்களுடைய கூட்டணி கட்சிகளின் ஆட்சி, இ.பி.எஸ்., தலைமையில் அமையும் என்று சொல்லி இருக்கிறார். எங்களுடைய கோரிக்கை. எல்லோரும் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Nesan
ஜூன் 15, 2025 21:33

உங்களை தலைவர் ஆக்கியது அவர் தான். ஆனால் அண்ணமலை இல்லாத தலைமை கரை போய் சேராது. யாருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கு அண்ணாமலைக்கா, உங்களுக்கா? பொறுத்திருந்து பாருங்கள். சீமானுக்கு இருக்கும் தைரியம் B.J.P க்கு இல்லவே இலை


Anantharaman
ஜூன் 15, 2025 08:43

தமிழ்நாடு உருப்பட்டாற்போவத்தான் அதிமுக விற்குத் தலைமை தருவது. அதிமுக, திமுக இரண்டும் குட்டையில் ஊறிய மட்டைகள்தானே!


புரொடஸ்டர்
ஜூன் 15, 2025 08:23

பாஜக கூட்டணி மத்திய அரசு தற்போதைய ஆட்சியில் ஈபிஎஸ் பிரதம மந்திரி பதவி ஏற்க்க முயற்சி செய் நயினார் நாகேந்திரன்.


Haja Kuthubdeen
ஜூன் 14, 2025 19:00

இப்பவும் சொல்கிறேன்...நயினாரின் அறிக்கையே உண்மையானது..மேலிடத்தின் அனுமதியில்லாமல் அவர் பேசமாட்டார்.கருப்பாடு அண்ணாமலையின் தந்திரம் சூழ்ச்சி விரைவில் முடிவுக்கு வரும்.அண்ணாமலையை இயக்குவது எந்த கட்சி என்பதை அவரை புகழ்பவர்கள் சீக்கிரமாக தெரிந்து கொள்வார்கள்.


சொல்லின் செல்வன்
ஜூன் 14, 2025 17:58

ஆட்சி அமைந்தால்தானே


venugopal s
ஜூன் 14, 2025 17:32

நந்தவனத்தில் ஓர் ஆண்டி ( நயினார்) அவன் நாலாறு மாதமாய் குயவனை (அமித்ஷா) வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி(கூட்டணி), அதைக் கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தான்டி (அண்ணாமலை)


SIVA
ஜூன் 14, 2025 17:43

ஆசை தோசை அப்பளம் வடை , அதிமுக பிஜேபி கூட்டணி ஆட்சி என்றால் திமுக கூட்டணி மொத்தமும் பணால் .....


SIVA
ஜூன் 14, 2025 17:45

விஜய் கூட்டணி ஆட்சி என்று சொன்ன போது விசிக அதை அதிமுக சொன்னால் சரியாக என்று சொன்னது மறைத்து விட்டதா கோபால்


vivek
ஜூன் 14, 2025 19:44

பொய்யில் பிறந்து பொய்யிலே வளர்ந்த வேணுகோபால் சொம்பே ....உம்மை புரிந்துகொண்டால் தெரிந்துகொண்டால் உங்களை வீட்டில் சேர்க்கமாட்டாங்க!


ramesh
ஜூன் 14, 2025 17:30

எடப்பாடி உடன் கூட்டணி ஆட்சி என்றால் . 3 மாதத்திலே admk என்ற கட்சியே இல்லாமல் செய்து ஆகி விடுவீர்களே . பாவம் admk கட்சி காரர்கள்


V K
ஜூன் 14, 2025 17:05

கைப்புள்ள வாய்ப்பு இல்லை


J.Isaac
ஜூன் 14, 2025 16:13

தமிழ் நாட்டில் அதிமுக கூட்டணி தானே. அப்போ தானே ஈபி எஸ் முதல்வர் ஆக முடியும்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 14, 2025 15:26

அதிமுக பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் இபிஸ் தான் முதல்வர் ...இதிலென்ன சந்தேகம் ...அதை தமிழக பாஜக தேவர் தெளிவு படுத்தி இருக்கிறார் .தமிழகத்தில் முதல் பெரிய கட்சி அதிமுக ...பாஜக வளந்துவரும் கட்சி ...இந்த உண்மையை புரிந்துகொண்டு பாஜகபேசுகிறது ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை