உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.3 லட்சம் லஞ்சம் பறிமுதல்; ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் விசாரணை

ரூ.3 லட்சம் லஞ்சம் பறிமுதல்; ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் விசாரணை

ஈரோடு: ஈரோட்டில் ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் இருவர் சிக்கி உள்ளனர்.இதுபற்றிய விவரம் வருமாறு: ஈரோடு கலெக்டர் அலுவலக பழைய கட்டடம் 4வது மாடியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் உள்ளது. இங்கு செயற்பொறியாளர் சேகர் என்பவரும், ஓவர்சியர் சுரேஷ் மணி என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஒப்பந்தகாரர் ஒருவர் வழங்கிய ரூ.3 லட்சம் லஞ்சம் பெற காத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புப் போலீசாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக களத்தில் இறங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார், கண்காணிப்பில் இறங்கினர்.அப்போது செயற்பொறியாளர் சேகர், ஓவர்சியர் ரமேஷ் பணி இருவரும் லஞ்சப்பணம் பெற்றனர். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

balakrishnankalpana
ஏப் 13, 2025 07:46

பணி நீக்கம் மட்டுமே பயத்தை கொடுக்கும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, டாஸ்மாக்கில் வாங்கி குடித்து செத்தவர்களின் குடும்பத்துக்கு பல லட்சங்கள் கொடுக்கும் நம் அரசு வாழ்க நம் சட்டம்


D.Ambujavalli
ஏப் 12, 2025 06:52

ல. ஓ. துறையின் இன்றைய / இம்மாத பணி quota முடிந்துவிட்டது அடுத்து ஒரு கடைநிலை ஊழியர் 100 ரூபாய் வாங்குவார் அவரை வெகு sincere ஆக மடக்கிப் பிடிக்கப் போவார்கள்


Matt P
ஏப் 11, 2025 22:41

நண்டுகள் சிக்குகின்றன . திமிங்கலம்கள் வலையை பிய்த்து கொண்டு ஓடி விடுகின்றன. அதிகாரிகள் சிக்குகிறார்கள். தலைமையை அசைக்க முடியாது என்பது தான் நிலை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை