உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் 50,000 பக்க குற்றப்பத்திரிகை; சகோதரருடன் செந்தில் பாலாஜி ஆஜர்

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் 50,000 பக்க குற்றப்பத்திரிகை; சகோதரருடன் செந்தில் பாலாஜி ஆஜர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரருடன் இன்று கோர்ட்டில் ஆஜரானார். இதில் 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. கூடுதல் குற்றப்பத்திரிகையும் கடந்த ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்டது.வழக்கில் செந்தில் பாலாஜி உள்பட மொத்தம் 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இவர்களுக்கு 50,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்களை காகித வடிவில் வழங்க அமலாக்கத்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.இந் நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி. சகோதரர் அசோக் குமார் உள்பட அனைவரும் நேரில் ஆஜராகினர். செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டிருந்த நிலையில், எஞ்சிய 12 பேருக்கு அதன் நகல்கள் இன்று (ஜூன் 9) வழங்கப்பட்டன.50,000 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை உள்ளதால் அதை படிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜூன் 23ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

N Ravi
ஜூன் 10, 2025 10:17

நாம தான் கூமுட்டைகள்


N Ravi
ஜூன் 10, 2025 10:16

அட் லாஸ்ட் வில்ல ஹெல்ப் டு லைப்ரரி இந்த ஆல் ப்ளக்ஸ் கருணாஸ் பெயர் உள்ள


Indra V sundaravaradan
ஜூன் 10, 2025 10:05

ஆதாரமே இல்லாத வழக்குக்கு 50000 பக்க குற்ற பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. நீதிபதி சாட்சிகளிடம் விசாரிக்கும் போது அமலாக்கத்துறை யின் அழுகுணி ஆட்டம் தெரியும்.


புரொடஸ்டர்
ஜூன் 10, 2025 08:45

50,000 பக்கங்கள் குற்றப்பத்திரிகையை முழுவதும் படித்துப்பார்க்க நீதிமன்றம் எத்தனை மாதங்கள் எடுத்துக்கொள்ளும்? விசாரணை முடிவதற்கு இருபது ஆண்டுகள் ஆகுமா அல்லது அதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகுமா? மேல் முறையீடுகள் முடிவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்? இறுதி தீர்ப்பு அறிவிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?


ராமகிருஷ்ணன்
ஜூன் 10, 2025 08:31

இதெல்லாம் விடியல் அரசின் சாதனைகள், உயர்தர கருங்கற்களில் செதுக்கி மண்ணில் புதைத்து வைத்து வருங்கால சந்ததியினர் அறிந்து ... கொண்டாட வாழ்த்துக்கள்


VENKATASUBRAMANIAN
ஜூன் 10, 2025 07:42

கொள்ளை அடித்தவர் மந்திரி. வழக்கை நடத்த மக்கள் வரிப்பணம்.இதுதான் திராவிட மாடல்.


KSB
ஜூன் 10, 2025 07:11

எப்படி எல்லாம் நம் வரிப்பணம் வீணாக்க படுகிறது இவர்கள் தமிழில் வேண்டும் என்று கூறுவார்கள். பிறகு 50000 பக்கங்களையும் தமிழில் மொழி மாற்றம் செய்து கொடுக்க வேண்டும்


Ramona
ஜூன் 10, 2025 06:12

ஒரு கோடி பக்கத்துல குற்றபத்திரிகையே இருக்கட்டுமே , என்ன பிரயோஜனம, ஒரே நிமிடத்தில் இவர் களங்கமற்றவர் ,தியாகி, என்று போற்றி ரத்ன கம்பள வழியாக வீட்டிற்கு வந்து மக்களுக்காக பணி ஆற்றுவார் .. என்ன சொல்ல .. உலகிலேயே மிகப்பெரிய சனநாயக நாடு நம்ம நாடு


Mani . V
ஜூன் 10, 2025 04:06

அதை ஐந்து கட்சி அமாவாசை படித்து முடிப்பதற்குள் அடுத்த தேர்தலே வந்து விடும். பத்து ரூபாய் பாலாஜி ஹாப்பி.


A P
ஜூன் 09, 2025 22:36

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் போலிருக்கிறதே இந்த குற்றப் பத்திரிகை . 50000 பக்கங்கள் உள்ளதனை பத்திரிகை என்று சொல்வதைவிட குற்ற லைப்ரரி என்றுதான் சொல்லணும். தமிழ்நாட்டுக்குப் பிடித்த சனியன்கள். இருக்குடீ ஒங்களுக்கு.


முக்கிய வீடியோ