உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள்; அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு

சட்டசபையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள்; அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு

திருச்சி: சட்டசபையில் தகாத வார்த்தைகளை முன்னாள் அமைச்சர்கள் பயன்படுகின்றனர்; அவர்களுக்கு மாண்பு இருக்கிறதாா? என அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். திருச்சியில் அமைச்சர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: ஜனநாயக முறைப்படி சட்டசபை நடத்தும் போது நிச்சயமாக அனைவரின் குரல்களுக்கும் பதில் அளிக்கப்பட்டு, இது மாதிரியான சில வார்த்தைகள் இருந்தால் நீக்குவது மரபு; கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமே இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zb35fkd1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதனால் அந்த வார்த்தைகள் எல்லாம் நீங்கள் கேட்டு இருக்க மாட்டீர்கள். இந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய முக்கியம் இருக்கிறது. ஜனநாயகத்துடன் ஆட்சி நடத்துகிறோம். ஜனநாயகத்துடன் அதற்கான பணிகளை சபாநாயகர் செய்து கொண்டு இருக்கிறார்.திமுகவினர் பக்கம் சட்டசபையில் கேமராவை திருப்பினால் எப்படி ரீல்ஸ் போட முடியும் என்று மக்களுக்கே தெரியும். நாங்கள் பேசி கொண்டு இருக்கிறோம். முதல்முறை எம்எல்ஏக்கள் நிறைய பேர் சட்டசபையில் இருக்கிறோம். நாங்கள் மாண்போடு கருத்துக்களை எல்லாம் முன்வைக்கிறோம்; மக்கள் பிரச்னைகள் குறித்து முன்வைக்கிறோம்; எல்லா விஷயங்களையும் பேசி கொண்டு இருக்கிறோம். அதேபோல் எதிர்தரப்பினர் கருத்துக்களுக்கும் பதில் சொல்லி கொண்டு இருக்கிறோம்.ஆனால் இவர்கள், சட்டசபையில் எதிர்தரப்பில் உட்கார்ந்து கொண்டு, எழுந்து கூச்சல் போடுகிறார்கள்; ஒவ்வொரு வரிக்கு வரி கூச்சல் போடுகிறார்கள். கத்தி கொண்டு இருக்கிறார்கள். அங்கே இருந்து இறங்கி ஓடி வருகிறார்கள். நான் நேரடியாக பார்க்கிறேன்.சில முன்னாள் அமைச்சர்கள் பின்னாடி உட்கார்ந்து கொண்டு, எங்களுடைய அமைச்சர்கள் பேசும் போது தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள்; சட்டசபையில் சண்டையை நடத்தி விட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் மாண்பு இருக்கிறதா? நாங்கள் தவறான எந்த வார்த்தைகளையும் பேசவில்லை. முதல்வர் விஜயை நம்பி எங்களுடைய கட்சிக்கு வந்தவர்களுக்கு எந்த விதத்திலும் எந்த குறையும் இல்லாமல் நிச்சயமாக அவர் பார்த்து கொள்வார். எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை. இப்பொழுது பட்ஜெட் கூட்டத்தொடர் தீவிரமாக போய் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் மக்களுக்கு தேவையான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம். ஹிந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையும் மிக சிறப்பாக முடிந்து இருக்கிறது. சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம். நிறைய கோவில்களில் திருப்பணிகளை செய்யும் வேலையை கையில் எடுத்து இருக்கிறோம். குறிப்பாக ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களை எல்லாம் கையில் எடுத்து திருப்பணிகள் செய்யும் வேலையை முன்னெடுத்து இருக்கிறோம். முழுமையாக சிதிலமடைந்த திருக்கோவில்கள் எல்லாவற்றையும் கையில் எடுத்து அதை மீண்டும் புதுப்பித்து வழிபாட்டுக்கு கொண்டு வரும் வேலையை முன்னெடுத்து இருக்கிறோம். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அனைத்தையும் முதல்வர் விஜய் செய்வார். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்புமுழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

athiban
ஆக 23, 2026 19:28

சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக ஔிபரப்பை மக்கள் நேரடியாக பார்த்தும் கூட இவ்வளவு பொய் இவர்களால் பேச முடிகிறது என்றால் என்னவென்று சொல்வது. அவர்கள் ரீல்சை நம்பி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். முதலில் முதல்வர் விஜய் அப்பாவை காணும் என்று சட்டசபையில் ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் எதிர்கட்சி தலைவர் முதல்வருக்கு எந்திருச்சு நின்னு வணக்கம் தெரிவிக்கவில்லை என புகார் வாசித்தார். அப்படி ஒரு நடைமுறையை கிடையாது என இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை சபாநாயகர் அப்படி ஒரு நடைமுறை கிடையாது என குட்டு வைத்தது நியாபகம் இருக்கிறதா என தெரியவில்லை. செந்தில் பாலாஜி மேல் ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருக்கலாம், அவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற மரியாதை கூட இல்லாமல் அமைச்சர் நிர்மல்குமார் தனது பேச்சை கரூர் கம்பெனி ஓனர் என்று ஆரம்பித்தது எல்லாம் மக்களுக்கு தெரியும். சட்டசபை நிகழ்வுகள் தங்களுக்கு எதிராக திரும்பி விடக்கூடாது அதுவும் எதிர்கட்சிகள் ஸ்கோர் செய்துவிடக்கூடாது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவையின் முக்கால் வாசி நேரத்தை வீணடித்து கத்தி கொண்டிருக்கிறார். இந்த கூத்துக்களை த.வெ.க., கட்சியினர் வேண்டுமென்றால் ரசிக்கலாம். பெரும்பாலான மக்கள் வெறுக்க தொடங்கிவிட்டனர்.


Raj
ஆக 23, 2026 16:26

அத நீ சொல்லாத நடக்கறத எல்லாம் மக்கள் பார்த்துகொண்டு இருக்கிறார்கள்


Raja k
ஆக 23, 2026 13:30

ஆமாங்க உதாவாதநிதி உங்களை சங்கி அமைச்சர், சாமி அமைச்சர்னு சொன்னாங்க..


ராமகிருஷ்ணன் பரமக்குடி
ஆக 23, 2026 13:03

திமுகவினர் சகலவிதமான கேடுகெட்ட குணங்களை உடையவர்கள். அவர்களிடம் நல்ல வார்த்தைகளை எதிர் பார்ப்பது அறிவீனம்


அருண் பிரகாஷ் மதுரை
ஆக 23, 2026 12:59

பொதுக்கூட்ட மேடைக்கும் சட்ட சபைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் யார் என்று உலகமே பார்க்கிறது.. வெற்றி பெற வைத்தவர் அமைதியாக இருக்கிறார். ஆனால் அவர் தயவில் வெற்றி பெற்றவர்கள் ரொம்ப ரொம்ப அதிகமாக வரம்பு மீறி பேசிக்கிறார்கள்,நேரலையில் ஓட்டுப் போட்ட மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.இடைத்தேர்தல் என்று ஒன்று வரும். பொறுங்கள் மைனாரிட்டி அரசின் அமைச்சரே.


prakash
ஆக 23, 2026 12:54

ஏம்பா பொய் சொல்ர நாங்கதான் பார்தோமே லைவ்ல தகாத வார்த்தை கழகம் TVK தான்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 23, 2026 12:16

முதலில் முதல்வரின் அமைச்சரவை சகாக்கள் அவரை தேவதூதர் போல புகழ்வதை நிறுத்திவிட்டு திமுகவைக் குறை சொல்லுங்கள் ....


முருகன்
ஆக 23, 2026 12:14

அவங்களுக்கு இருக்கின்றதே இல்லையே ஆனால் உமக்கு அதிகார .... வந்து விட்டது


Kavi Priyan Adelaide
ஆக 23, 2026 12:06

முதலில் நீங்கள் உங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் அமைச்சரே.. ஆதாரமில்லாமல் ஏதாவது பேச வேண்டியது, அதை சபாநாயகர் நீக்க வேண்டியது… இப்படி தான் சட்டசபை நடக்கிறது.. தைரியமிருந்தால் ஆதாரத்தோடு சொல்லி, வழக்கு பதிவு செய்து தண்டனை வாங்கி கொடுக்க முயற்சி செய்யுங்கள்… ரீல்ஸ் கண்டெண்ட்டுக்காக பேசும் வசனங்கள் குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் உதவலாம்.. ஆனால் நீண்ட கால அரசியலுக்கு உதவாது என்பது தான் உண்மை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை