உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நியாயமான நிதி பகிர்வே உண்மையான கூட்டாட்சி தத்துவம்: தங்கம் தென்னரசு

நியாயமான நிதி பகிர்வே உண்மையான கூட்டாட்சி தத்துவம்: தங்கம் தென்னரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை:நிதி பகிர்வில் மத்திய அரசு, பெரியண்ணன் மனப்பாங்குடன் நடந்து கொள்கிறது. நிதி பகிர்வுக்கான தன்னாட்சி பெற்ற அமைப்பில், அடிப்படை கட்டமைப்பு மாற்றம் தேவை. நியாயமான நிதி பகிர்வே உண்மையான கூட்டாட்சி தத்துவம் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.கோவையில் நடந்து வரும், 'இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு - 2025' நிகழ்வில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:தமிழகத்தைப் பொறுத்தவரை, திட்டங்கள், செலவுகளுக்காக மூன்றில் இரண்டு பங்கை மாநில அரசே ஏற்க வேண்டியுள்ளது. ஆனால், வருவாய் பங்கீட்டில் மூன்றில் ஒரு பங்கே கிடைக்கிறது. மத்திய அரசு, தான் ஆளும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்துக்கு வழங்குவதில்லை. சரி செய்ய முடியாத அளவுக்கு நிதி சிக்கல்களை, தற்போதைய நிதி பகிர்வு முறை உருவாக்கியுள்லது.மும்மொழிக் கொள்கையை ஏற்காததால், சமக்ரசிக்ஷா திட்டத்துக்கான 4,000 கோடியை வழங்கவில்லை. பேரிடர் மேலாண்மை நிதியில் ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நிதி மட்டும் வருகிறது. பேரிடரால் ஏற்பட்ட உண்மையான இழப்புக்கு உரிய நிவாரணம் தருவதில்லை.மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில், மத்திய அரசின் பங்களிப்பு 75 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வுக்கான கட்டமைப்பை உருவாக்க, அதிக முதலீடு தேவைப்படும். ஆனால், மத்திய அரசு தருவதில்லை.எந்த பொருளுக்கு எவ்வளவு வரி என்பதை மாநிலம் தீர்மானித்து வந்தது. ஜி.எஸ்.டி.,க்குப் பின் அது, பறிக்கப்பட்டு விட்டது. ஆனால், மத்திய அரசுக்கு செஸ், சர்சார்ஜ் என கூடுதல் வருவாய் கிடைக்கிறது.வரி குறைப்புக்கு, சீரமைப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. உண்மையிலேயே நுகர்வோருக்கு இதன் பயன் சென்றடையும் என்றால் வரவேற்கிறோம். ஆனால், பாதிக்கப்படுவது மாநிலங்களே. அதற்கு உரிய இழப்பீடு தர வேண்டும்.

இழப்பு ஏற்படும்

ஜி.எஸ்.டி., அடுக்குகள் மாற்றியமைக்கப்பட்டதால், தமிழகத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தின் வருவாயில் பெரும் பகுதி ஜி.எஸ்.டி.,யில் இருந்து கிடைக்கிறது. இப்போது திடீரென வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவது.ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், மாநிலங்கள் வாக்களிக்கலாம் என மத்திய நிதியமைச்சர் கூறுகிறார். முடிவெடுத்தபின், ஒப்புதலுக்காகவே கவுன்சில் கூட்டப்படுகிறது. முடிவெடுக்கும் முன், மாநிலங்களிடம் ஆலோசிக்கலாமே. நிதி பகிர்வில் மத்திய அரசு, பெரியண்ணன் மனப்பாங்குடன் நடந்து கொள்கிறது. நிதி பகிர்வுக்கான தன்னாட்சி பெற்ற அமைப்பில், அடிப்படை கட்டமைப்பு மாற்றம் தேவை. நியாயமான நிதி பகிர்வே உண்மையான கூட்டாட்சி தத்துவம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Sadananthan Ck
செப் 09, 2025 04:11

உங்களுக்கு நிதி கொடுத்தால் என்ன ஆகும் என்று இந்த உலகத்துக்கே தெரியும் எவ்வளவு நிதி கொடுத்தாலும் உங்களுக்கு போதாது ஏனெனில் உங்களுக்கு அரசியல் செய்ய வேண்டும் என்றால் பிஜேபி யை எதற்கெடுத்தாலும் எதிர்க்க வேண்டும் ஆதலால் உங்களுக்கு எவ்வளவு தான் நிதி கொடுத்தாலும் நீங்கள் புலம்புவது நிற்காது


Thulasiram
செப் 09, 2025 03:25

உண்மைதான் கட்சிதலைவர்களின் - வருவாயை கட்சி தொண்டர்களுக்கும் சமமாக பிரித்து கொடுப்பதுதான் ஒரு தூய.அரசியல் கட்சியின் குணமாக இருக்க வேண்டும். அதிகாரத்தால் வரும் முறையற்ற வருவாயை வெளிப்படையாக கட்சி உறுப்பினர் களுக்கு கணக்கு காட்டி அணைக்கும் சரிசமமாக பிரித்து கொள்க


தாமரை மலர்கிறது
செப் 09, 2025 01:53

திமுக எவ்வளவு ஒப்பாரி வைச்சாலும், தமிழகத்திற்கு ஒரு பைசா கொடுக்க கூடாது. கொடுத்தால், திருடப்பட்டுவிடும். ஒட்டுமொத்த அமைச்சர்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. காயவிட வேண்டும். கஜானா காலி என்றால், திருடர்கள் ஓடிவிடுவார்கள். மத்திய அரசின் அனைத்து நிதியையும் உடனடியாக நிறுத்தி, திமுகவிற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.


Bhakt
செப் 08, 2025 23:51

திருட்டு கும்பல் கழகம்


Bhakt
செப் 08, 2025 23:51

கொள்ளை அடிக்க தானே


ManiMurugan Murugan
செப் 08, 2025 23:27

ஜிஎஸ்டியினால் 27பைசா தான் கிடைக்கிறது மாநிலத்திற்கு வருமானம் கிடையாது என்றவர்கள் ஜிஎஸ்டி குறைப்பால் 5000 கோடி இழப்பு என்கிறார் அயர்லாந்துவாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி நிதியமைச்சர் மற்றும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட திருப்புவனம் அடித்து கொலை வழக்கை நடக்க விடாமல் தடுக்கும் உண்மை குற்றவாளி தங்கம் தென்னரசு இப்படி எவ்வளவு காலம் பொய்மூட்டையை அவிழ்த்து விட்டு ஒப்பாரி வை ப் பீர் கள் சொல்லும் பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் உண்மை யா காது திரை கதை வசன நாடகமாகும் இவருக்கு எப்போது தண்டனை க் கிடைக்குமட


Sivasankaran Kannan
செப் 08, 2025 23:24

23ம் புலிகேசியின் கொள்ளை கூட்டம் என்ன வேண்டுமானாலும் உளரலாம். ஒரு முடி அளவு கூட தமிழ்நாட்டின் மக்கள் மேல் அக்கறை இல்லாமல் கிடைத்த பதவியில் சுருட்ட முடிந்த அளவு சுருட்டும் கும்பல் மத்திய அரசின் மீது வெட்டி பழி பேசி நாடகம் நடத்துகிறது.. கொடுத்த 4000 கோடி சென்னை மழை நீர் வடிகால் சொல்லும் இவர்கள் யோகியதை என்ன என்று..


R.MURALIKRISHNAN
செப் 08, 2025 22:46

அதிகாரத்தில் உள்ள திமுக கயவர்களை அகற்றுவதே மக்களாட்சியின் தத்துவம். மக்கள் தயார்.


V Venkatachalam
செப் 08, 2025 22:43

இவரு பேச வேண்டியது திமுக கூட்டணி தத்துவம் பற்றி.‌ அதுல உங்களோட பிராடு பற்றி.‌அதுல கூட்டணி கட்சிகளை நீங்க நடத்துற விதம் பற்றி. அவுங்களை மிரட்டுற விதம் பற்றி. இவை எல்லாம் பேசிய பின்பு உண்மையான கூட்டாட்சி தத்துவம் பற்றி பேசணும்.


ManiK
செப் 08, 2025 22:36

என்ன கூட்டாட்சி வேண்டிகெடக்கு திமுக கும்பலுக்கு? மத்திய அரசை தேவையில்லாமல் பழிபோட்டு, நயவஞ்சகமாக கேவலபடுத்த முயற்சி செய்யும் ஸ்டாலின் நடத்துவது காட்டாட்சி மட்டுமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை