உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பைசல் ரஹ்மான் டைரி சிக்கியது: கூட்டாளிகளுக்கு என்.ஐ.ஏ., வலை

பைசல் ரஹ்மான் டைரி சிக்கியது: கூட்டாளிகளுக்கு என்.ஐ.ஏ., வலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சென்னையில் கைதான, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவரிடம் கைப்பற்றிய, ரகசிய டைரியில் உள்ள தகவல்கள் அடிப்படையில், அவரது கூட்டாளிகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' என்ற பயங்கரவாத அமைப்புக்கு, மத்திய அரசு தடை விதித்தது. தமிழகத்தில், இந்த அமைப்புக்கு ஆட்கள் சேர்த்து, அவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்தது தொடர்பாக, சென்னை அண்ணா பல்கலை முன்னாள் கவுரவ பேராசியர் டாக்டர் ஹமீது உசேன் உட்பட, ஏழுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pububgob&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 10ம் தேதி, சென்னை தரமணியில், முக்கிய குற்றவாளியான பைசல் ரஹ்மான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவரது ரகசிய டைரி சிக்கியது. இது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கவராத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது மற்றும் ரகசிய கூட்டங்கள் நடத்துவது போன்றவற்றில், பைசல் ரஹ்மான் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்துடன் ரகசிய தொடர்பில் இருந்துள்ளார். அவர் தமிழகம் முழுதும் பயணித்து, மாவட்டத்திற்கு, 10 பேர் என, பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்துள்ளார். அவர்களுக்கு ஆயுத பயிற்சியும் அளித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் ரகசிய டைரியில் உள்ளன. அதில் உள்ள தகவல்கள் அடிப்படையில், பைசல் ரஹ்மானின் கூட்டாளிகளை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

raja
அக் 18, 2024 09:42

திருட்டு ஒன்கொள் கோவால் புற திராவிடர்களின் தொப்புள் கொடி உறவுகள் சர்வ சாதாரணமாக பயங்கரவாத நடவடிக்கைகள் செயல் திட்டம் தீட்டும் சொர்க பூமி ஆகிவிட்டது ...


Nandakumar Naidu.
அக் 18, 2024 08:43

தமிழகத்தில் என்ன நடக்குது என்று தெரியாமல் விளங்காத விடியா அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. திராவிட கட்சிகள் நம் சாபக்கேடு.


KavikumarRam
அக் 18, 2024 09:43

அதெல்லாம் நல்லா தெரியும். காசு குடுக்கிறதா இருந்தா என்ன வேணாலும் செய்யும் இந்த நாதாகரீக குடும்ப.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 18, 2024 08:03

எனக்கொரு சந்தேகம் தீவிரவாதிகளை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர், கைது செய்தனர் என்று செய்திகள் வந்த வன்னம் இருக்கிறது....கைது செய்தவர்களின் குற்றம் நிருபிக்க பட்டதா, அவர்கள் தண்டனை பெற்றார்களா? அந்த வழக்கின் தீர்பென்ன? தண்டனைகளின் விவரம் எதுவுமே தெரிவதில்லை....அவர்களுக்கு இந்த தண்டனை கிடைத்தது என்று தெரிந்தால் தானே அத்தகைய குற்றங்களை செய்யாதிருப்பார்கள்....தண்டனைகள் மிக கடுமையாக இருப்பது மக்களுக்கு தெரியப்படுத்தினால் தானே மற்றவர்கள் செய்ய பயப்படுவார்கள்..... அரசியல்வாதிகளிடமும்,சினிமா நடிகர்கள் நடிகைகளிடமும் தேவையில்லாத கேள்விகள் கேட்கும் ஊடகங்கள் ஏன் போலிஸ், NIA, அமலாக்க துறை, வருமானவரி துறை, NCB போன்ற துறைகளிடம் கேள்விகளை கேட்டு வழக்கின் போக்கினை மக்களுக்கு தெரிய படுத்துவதில்லை...சாதாரண குடிமகனாக எனக்கே இந்த எண்ணம் தோன்றும்போது சம்பந்த பட்டவர்களுக்கு தெரியாதா....என்ன தான் நடக்கிறது நாட்டில்....!!!


இந்தியன்
அக் 18, 2024 07:52

பாகிஸ்தானுக்கு இஸ்ரேல் பாஷையில் சொன்னால் தான் சரியாக வரும்


பேசும் தமிழன்
அக் 18, 2024 07:39

பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி விட்டது என்பதையே இது காட்டுகிறது..... தமிழகத்தில் இருப்பது தான் நமக்கு பாதுகாப்பு என்று அவர்கள் அனைவரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.... இங்கே இருக்கும் அரசு அவர்களின் மீது மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.


Duruvesan
அக் 18, 2024 06:50

மார்க்கம் எப்போதும் அமைதி மட்டுமே போதிக்கும்


சுந்தர்
அக் 18, 2024 06:45

இதை இப்போதே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. டைரியில் உள்ள அனைவரையும் பிடித்த பின்னர் சொல்லலாமே. தீவிரவாதிகள் தப்பித்து விட எந்தவித சந்தர்ப்பமும் கொடுக்கக் கூடாது.


Lion Drsekar
அக் 18, 2024 06:39

இன்று டைரி சீரியல் ஆரம்பம் . வாழ்த்துக்கள் , வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை