உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் புகார்

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கொளத்தூர் தொகுதியில் கூட போலி வாக்காளர்கள் இருப்பதாக பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் அவசியமே இரட்டை வாக்காளர்கள், போலி வாக்காளர்களை களைவது தான் என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நிருபர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் நாடகம் நடத்தியுள்ளார். அவர்கள் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் வரும் போது எல்லாம், அதனை திசை திருப்புவதற்காக பல்வேறு விஷயங்களை கையில் எடுப்பது அவர்களது வாடிக்கையாக இருந்து கொண்டு இருக்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து இருக்கிறார்கள். வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் அவசியமே, இரட்டை வாக்காளர்கள், இறந்து போன வாக்காளர்கள், போலியான வாக்காளர்களை களைவது தான்.

கொளத்தூர் தொகுதியில்...!

பீஹாரில் அந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் அவசியமாக இருந்தது. கிட்டத்தட்ட 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றனர். முறையான வாக்காளர்கள் பட்டியல் இருக்க வேண்டும். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். இது வரவேற்கதக்க ஒன்று. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம்; அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் கூட போலி வாக்காளர்கள் இருப்பதாக பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

போலி வாக்காளர்கள்

நியாயமான வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம், உண்மையான வாக்காளர்களை கொண்டு வருவது தான் நோக்கமாக இருக்கிறது. போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று பலமுறை திமுகவினரே சொல்லி இருக்கிறார்கள். இப்பொழுது திடீரென திமுக எதிர்த்து கொண்டு இருக்கிறது. முறையான தேர்தல் நடத்த வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டும். அப்போது தான் ஜனநாயக நாட்டில் சரியான வாக்களிப்பு இருக்கும். உச்சநீதிமன்றம் தெரிவித்ததன் அடிப்படையில்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

SUBBU,MADURAI
நவ 04, 2025 07:36

அமைச்சர் ஆக்கி மாபெரும் தவறு செய்து விட்டது மோடியின் அரசாங்கம் இவரயிட்டு தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை


Mario
நவ 03, 2025 20:35

அப்போ இந்திய தேர்தல் ஆணையம் ஒழுங்கா வேலை செய்யலையா


Rahim
நவ 03, 2025 18:53

நண்பரே உங்க கருத்து உங்களுக்கே சிரிப்பு வந்திருக்கும் நான் குறிப்பிட்டது வாசகர்களின் பெயரை குறிப்பிட்டு ஒரு வாசகர் எழுதுவது அவரது பெயரை நாம் குறிப்பிட்டால் அது மறுக்கப்படுவது பற்றி நீங்கள் சொல்வது செய்திகளில் தொடர்புடைய இரண்டு அரசியல் தலைவர்கள் பற்றி.


Rahim
நவ 03, 2025 16:49

விவேக் என்பவர் எந்த உரிமையில் மற்ற வாசகர்களை பெயர் குறிப்பிட்டு எழுதுகிறார் அதை நீங்கள் எப்படி வெளியிடலாம் ? அய்யா நீங்க 75 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த சிறப்பான வேளையில் தயவுசெய்து எல்லா வாசகர்களுக்கும் சம உரிமையை கொடுங்கள் நடத்துங்கள் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ......


Madras Madra
நவ 03, 2025 17:23

எந்த உரிமையில் மோடி அமிட்ஷா பெயரை ஊழல்வாதிகள் குடும்ப வாதிகள் தீவிர வாதிகள் எல்லாம் சொல்கின்றனரோ அந்த உரிமை எல்லாருக்கும் இருக்கு ரஹீம் பாய்


T.sthivinayagam
நவ 03, 2025 16:24

பத்து வருடங்களுகாளாக தேர்தல் ஆணையம் பாஜக கன்ட்ரோலில் தான் உள்ளது ,நிர்வாக திறமையற்ற மத்திய அரசு என்பதை ம.து.அமைச்சர் முருகன் ஜீ ஒத்துக்கொண்டு உள்ளார்.என வாக்காளர் கூறுகின்றனர்.


vivek
நவ 03, 2025 16:38

இவன் கூறுகிறான் அவன் கூறுகிறான்....நீ எப்போ சொந்த அறிவோடு கூறப்போகிறாய் சிவநாயகம்


ராமகிருஷ்ணன்
நவ 03, 2025 16:19

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் மட்டுமல்ல, எதிர் கட்சி வாக்காளர்களின் பெயர்கள் நீக்குகிறார்கள் திமுகவினர். அரசு ஊழியர்களில் 90 சதம் திமுகவினர் இருக்கிறார்கள், அவர்கள் மிக மோசமான திருட்டு தனம் செய்கிறார்கள். எலக்ட்ரானிக்ஸ் ஓட்டு பெட்டிகளை ரிசல்ட் வெளிப்பாடாத மாதிரி செய்ய தெரிந்து உள்ளது.


K.n. Dhasarathan
நவ 03, 2025 16:10

முருகன் அமைச்சரே நீங்கள் உங்கள் தொகுதிக்கு சரி வர வருவதில்லை, மேம்பாட்டு வேலைகளை கவனிப்பதில்லை என்று குற்ற சாட்டுகள் ஏராளம், அப்படி இருக்கையில் உங்களுக்கு முதல்வர் தொகுதியில் என்ன இருக்கு, என்ன இல்லை என்பது தெரியுமா?


vivek
நவ 03, 2025 16:40

கொளத்தூர் மக்களுக்கு தெரியும் தசரதா....நிறைய போலி இருக்கு


முருகன்
நவ 03, 2025 16:55

மக்கள் மத்தியில் தோல்வி அடைந்த இவருக்கு எங்கே தொகுதி உள்ளது?


T.sthivinayagam
நவ 03, 2025 18:57

எல்லாம் தன் நிலையை காப்பாற்றி கொள்ள இவ்வாறு எல்லாம் பேச வேண்டி உள்ளது


V Venkatachalam, Chennai-87
நவ 03, 2025 15:39

இதுக்கு தானே 44 கட்சி சிரிப்பு கூட்டம்.‌ ஆஹா அம்புட்டும் வீணாகி விடுமே.


Vasan
நவ 03, 2025 14:51

2031இல் திமுக+அதிமுக கூட்டணி அமையுமா?


திகழ்ஓவியன்
நவ 03, 2025 14:31

ஏன் நடவடிக்கையை எடுக்கவில்லை நீங்க தான் செய்யணும்


vivek
நவ 03, 2025 16:39

இப்போ சுளுக்கு எடுக்க போறோம் திகழ்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை