| ADDED : ஜன 11, 2024 10:35 PM
சென்னை:வடகிழக்கு பருவமழை, வரும் 15ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள அறிவிப்பு:வடகிழக்கு பருவ மழை, 15ம் தேதி முதல், தென் மாநிலங்களில் இருந்து விலகும் என தெரிகிறது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில், சில இடங்களில் கன மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 31 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை அருகில் உள்ள நாலுமுக்கு பகுதியில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.