உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகள் அடையாள அட்டை திட்டம்: வேளாண் அலுவலர்களுக்கு பணிச்சுமை

விவசாயிகள் அடையாள அட்டை திட்டம்: வேளாண் அலுவலர்களுக்கு பணிச்சுமை

திருப்பூர்: தனித்துவ அடையாள அட்டை திட்டத்திற்காக, விவசாயிகளின் நில விவரங்களை சேகரிக்கும் பணியில் வேளாண், தோட்டக்கலை களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 'பணிச்சுமையால் துறை சார்ந்த பிற பணிகள் பாதிக்கின்றன' என, அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.துறை சார்ந்த திட்டங்களின் பயன் தடையின்றி சென்று சேர்வதற்காக ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவ அடையாள எண் வழங்க, மத்திய அரசு முடிவெடுத்தது. அந்தந்த மாநில அரசுகளின் வாயிலாக, விவசாயிகளின் விவரங்களை பிரத்யேக செயலி வாயிலாக சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.தமிழகத்தில், விவசாயிகளின் விவரங்களை மொபைல் செயலி வாயிலாக பதிவேற்றம் செய்யும் பணியை வேளாண் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு அலுவலரும், 4 அல்லது, 5 ஊராட்சிகளில் இப்பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது.அலுவலர்கள் கூறுகையில், ''நாள் முழுக்க இப்பணி காரணமாக, துறையின் பிற பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. விவசாயிகளை நேரில் சந்தித்து, தொழில்நுட்பம் கற்றுத்தருதல், பயிர் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை வழங்குதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த முடிவதில்லை. வேளாண் மாணவர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்களை கொண்டு இப்பணிகளை முடிக்க வேண்டும் என, உயரதிகாரிகள் வழிகாட்டுதல் வழங்குகின்றனர்; ஆனால், இது சாத்தியப்படவில்லை'' என்றனர்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடக பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், ''விவசாயிகளின் நில அடங்கள் விவரம் அனைத்தும் வருவாய்த்துறையினர் வசமே உள்ளன. இப்பணியை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டால் தான், விவசாயி மற்றும் விவசாய நிலம் தொடர்பான முழுமையான தகவல்களை பெற முடியும்; இத்திட்டத்தின் நோக்கமும் முழு பலன் தரும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Satham Ushen
பிப் 22, 2025 23:18

விவசாயமும் விவசாயிகளும் இம்மண்ணில் வாழும் வரை தான் மனித இனங்கள் மண்ணில் வாழ முடியும்தன் எதிர்காலத்தை பொருப்படுத்தாமல் அன்றாட உணவு தேவைக்காக இவ்வுலகில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறோம் ஆனால் மக்கள் வரிப்பணத்தில் மாதந்தோறும் ஊதியம் பெறும் அலுவலருக்கு இப்பணி சுமையாக உள்ளதா


Satham Ushen
பிப் 22, 2025 23:12

வேளாண் அலுவலர்கள் இப்பணியை பணி சுமை என்று நினைத்தால் தாராளமாக வேலையை விட்டுப் போங்கள் சேவை என நினைக்கும் இளைஞர்கள் தொடர்வார்கள்


Kannan K
பிப் 20, 2025 17:01

சிறப்பான thittam


kesavan.C.P.
பிப் 19, 2025 13:26

யூ டி ஆர் திட்டத்தில் இதே போல் பதிவுகள் செய்ததால் பல தவறான பதிவுகள் திருத்த முடியாத. பதிவுகள் பதிவு செய்யப்பட்டு விட்டது. உச்சநீதிமன்ற உத்தரவு படியும் திருத்த முடிய வில்லை. யாருக்கும் திருத்தம் வழி முறை தெரியவில்லை . இதிலும் பல தவறான பதிவுகள் ஏற்படும் .


Sivaprakasam Chinnayan
பிப் 19, 2025 12:46

What is the work.load for Agri officers.


Velusamy Subbaiyan
பிப் 19, 2025 11:15

கரக்கும் கரங்கள் கம்யூட்டர் பிடிக்குமா, பணத்தை சாப்பிடுபவர்கள் பயிர் பாதுகாப்பு பற்றி பரிசீலிப்பார்களா, கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடந்துகொண்டிருந்த விவசாயிகள் அடையாள அட்டை திட்டத்தில் நான் பயன் பெற எனது விவசாய நில ஆவணங்கள் பதிவு செய்தேன். நீங்கள் பஞ்சாயத்து அலுவலர் தானா என்று விசாரித்தேன். விவசாயத் துறை அலுவலர் என்றார். விவசாயிகள் அதிகம் பேர் காத்திருந்தார்கள். மத்திய, மாநில அரசுகள் வேளாண் துறை இலாப நோக்கம் பார்க்காமல் ஒரு கிராமத்திற்கு ஒரு அரசுக்குச் சொந்தமாக விவசாய அலுவலகம் மற்றும் இரண்டு விவசாய அலுவலர்கள் என்ற கோட்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.


R.RAMACHANDRAN
பிப் 19, 2025 10:19

வேளாண் அலுவலர்கள் எந்த வேலையும் செய்யவில்லை.எனவே தான் அவர்களுக்கு நில உரிமை தனித்துவ அட்டை வழங்க விவரங்களை சேகரிக்க ஈடுபடுத்தியுள்ளனர்.கிராம நிர்வாக அலுவலர்கள் ஒருவருக்கு உரிமையான நிலத்தை மற்றவர்கள் பெயருக்கு போலியான ஆவணங்கள் தயாரித்து வைத்துக் கொண்டு அவற்றை நிலை நிறுத்தும் குற்றத்தில் ஈடுபடுவதால் அவர்களை இப்பணிக்கு பயன்படுத்தாதே நன்று.விவசாயிகள் சங்கத் தலைவர்களுக்கு கிராம நிர்வாக அழுவார்கள் செய்யும் குற்றங்கள் தெரிந்திருக்க வில்லை என்பதால் அவர்களை ஈடுபடுத்த கோருகின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை