உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உருவ பொம்மை எரித்த நிர்வாகிகள் மீது தீப்பற்றியது; தி.மு.க., போராட்டத்தில் பரபரப்பு

உருவ பொம்மை எரித்த நிர்வாகிகள் மீது தீப்பற்றியது; தி.மு.க., போராட்டத்தில் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திமுக இன்று தேனி மற்றும் போடியில் நடத்திய உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில், கட்சி நிர்வாகிகள் இருவர் மீது தீப்பற்றியது.லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தி.மு.க.. எம்.பி.,க்கள் நாகரிகமற்றவர்கள் என பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று தேனி நேரு சிலை அருகே அவரின் உருவபொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் நாராயண பாண்டியன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் உருவ பொம்மை எரித்தபோது தேனி நகர நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாகண்ணன் மீது திடீரென தீ பற்றியது. அதை அணைத்தனர். பின் அவரது கையில் தீக்காயம் ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u8ivemii&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வேட்டியை அவிழ்த்து ஓடிய நிர்வாகி: போடி தேவர் சிலை அருகே நடந்த உருவ பொம்மை எரிப்பு ஆரப்பாட்டத்தில் தி.மு.க., நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் பரணி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் மத்திய அமைச்சரின் உருவபொம்மையை எரித்தனர். அப்போது நகர முதல் வார்டு தி.மு.க. செயலாளர் சந்திரசேகரின் வேட்டியில் தீ பற்றியது. சுதாரித்தவர், உடனடியாக வேட்டியை கழற்றி வீசிவிட்டு, உடலில் தீ படாதவாறு,குடுகுடுவென ஓட்டம் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Balaji Radhakrishnan
மார் 11, 2025 19:46

கடவுளால் தண்டிக்கப்பட்ட இரண்டு திமுக காரர்கள். இது ஒரு sample.


naranam
மார் 11, 2025 12:01

இந்தத் தீ அந்த சட்ட மன்ற உறுப்பினருக்கும் பற்றியிருந்தால் நல்ல விசேஷமாக இருந்திருக்கும்.


ஆரூர் ரங்
மார் 11, 2025 11:43

கறை வேட்டி எரிந்தது திமுகவிற்கு தீய சகுனம்.


Kanns
மார் 11, 2025 11:35

Gods Punishment. Ruling Party Goondas& Stooge Officiadoms Only Understand their Own Language.


theruvasagan
மார் 11, 2025 11:07

தூண்டிவிட்டவனெல்லாம் ஏ.சி ரூமில் ஹாயாக அனுபவித்துக் கொண்டிருக்க எலிப் புழுக்கைகள் எல்லாம் வெயிலில் கருகுகிறது. அதுக தலைவிதி அப்படி. சொன்னால் புரியுமா. இல்லை சுயமாதான் தெரியுமா.


Dharma
மார் 11, 2025 10:23

தமிழ்நாட்டை விட்டு வெளியேறு.


Mecca Shivan
மார் 11, 2025 10:05

நெருப்போடு விளையாடாதே என்று அண்ணாமலை சொன்னது நினைவிற்கு வருகிறது .. உள்ளேயும் சரக்கு வெளியேயும் சரக்கு என்று இருக்கும்போது தீ வைக்கலாமா ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 11, 2025 10:01

ஒரே இடத்தில் இருவருக்கு தீப்பிடித்து என்றால் ஏதோ விபத்து என்று எடுத்து கொள்ளலாம். இரண்டு வெவ்வேறு இடங்களில் ஒரே மாதிரி தீ பிடித்ததை வைத்து பார்க்கும் போது திமுக பாணியில் சினிமா வசனமாக சொல்ல வேண்டும் என்றால் கடவுள் இருக்காண்ட குமாரு


Dharma
மார் 11, 2025 09:04

நான் கோவிலுக்கு அதிகம் செல்வதில்லை. அப்படி சென்றாலும் அர்ச்சகர் தட்டில்தான் காணிக்கை செலுத்துகிறேன். உண்டியல் பக்கமே போவதில்லை.


SIVA
மார் 11, 2025 09:03

தன் வினை தன்னை சுடும், கருணாநிதி உடன் கூட்டணி வைத்தால் கட்டின வேட்டியையும் பிடுங்கி விடுவார் என்று சொன்னது ராமதாஸ் அவர்கள், இன்று பலர் குடித்து விட்டு குடி போதையில் வேட்டி இல்லாமல் ரோட்டில் மயங்கி கிடக்கின்றனர், இப்போது கூட மூன்று மொழி கல்வி வேண்டும் என்று சொன்ன ஆளுநரை நடு ரோட்டில் ஒட விடுவேன் என்று இதே தவிட்டு திராவிட மாடல் ஆட்சியை ஆதரிப்பவர் பேசினார், நீ பற்ற வாய்த்த நெருப்பொன்று பற்றி கொள்ளும் உனக்கென்று வசனம் பேசிய நடிகரை கூட இணைத்து கொண்டிர்கள் இப்பொது உங்கள் வேட்டி பற்றி எரிகின்றது, வரலாறில் ஒரு விஷயத்திற்காக முதல் முறை நடை பெரும் சம்பவமே சரித்திரமாக இருக்கும் அது நல்லதோ கெட்டதோ, இரண்டாவது முறை நடைபெறும் போது காமெடியாக மாறி விடும், உங்கள் மொழிப்போராட்டத்தின் நிலையும் அது தான் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை