உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொண்டரை தூக்கி வீசிய பவுன்சரால் வந்த வினை: நடிகர் விஜய் மீது பதிவானது முதல் குற்றவழக்கு

தொண்டரை தூக்கி வீசிய பவுன்சரால் வந்த வினை: நடிகர் விஜய் மீது பதிவானது முதல் குற்றவழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரம்பலூர்: மதுரை மாநாட்டில் தொண்டரை பவுன்சர் தூக்கி வீசிய சம்பவத்தில், நடிகர் விஜய் மீது முதல் குற்றவழக்கு பதிவாகி உள்ளது.மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.21ம் தேதி நடைபெற்றது. மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். மாநாட்டு மேடைக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் ரேம்ப் வாக் (ramp walk) சென்றார்.இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நடிகர் விஜய் கை அசைத்த படியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு தொண்டர், ரேம்ப் வாக் மேடை மீதேறி விஜயை நெருங்க முயன்றார். அவரைச் சுற்றி இருந்த பவுன்சர்கள், அந்த தொண்டரை அலேக்காக தூக்கி வீசினர். இது தொடர்பான வீடியா இணையத்தில் வெளியாக பெரும் விமர்சனங்கள் எழுந்தன.இந் நிலையில் பவுன்சரால் தூக்கி வீசப்பட்ட தொண்டரான சரத்குமார் என்பவர் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், நடிகர் விஜய், அவரின் 10 பவுன்சர்கள் மீது குன்னம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்கு தான் நடிகர் விஜய் மீது பதியப்பட்ட முதல் குற்ற வழக்காகும். குற்ற வழக்கு எண்; 346/2025 கொலை மிரட்டல், கூட்டு தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வழக்கில் முதல் குற்றவாளியாக(A1) நடிகர் விஜய், மற்றவர்களாக பவுன்சர்கள் 10 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த மதுரை தவெக மாநாடானது, கூட கோவில் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் வருகிறது. எனவே, தற்போது பெரம்பலூர் குன்னம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மதுரை கூடகோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கு மாற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Manju Priya
ஆக 31, 2025 22:11

Actually vijay tend to met with muder or attack by opponent party.bouncers defend him to save vijay..


Manju Priya
ஆக 31, 2025 22:06

விஜயை தஆன் கொள்ள வந்தார்கள் பௌன்சர்ஸ் விஜயை காப்பாற்ற மூளும்போது அப்படி செய்ய வேண்டி ayitru..


Krishnamurthy Venkatesan
ஆக 28, 2025 13:01

விஜய் அவர்களை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக வழக்கு தொடர்ந்தால் அவர்களின் கதி என்ன ஆகும்?,


தஞ்சை மன்னர்
ஆக 28, 2025 11:12

இதில் பாதுகாப்பு பகுதியில் அத்து மீறியதாக வழக்கு இவன் மீது போலீசாரிடம் அப்பவே புகார் அளித்து இருந்தால் இப்ப இந்த வழக்கே வந்து இருக்காது இதுதான் பெருந்தன்மை அப்போது தொண்டன் என்று விட்டது இப்போது கொலை முயற்சி வழக்காக மாறி கொத்த போகுது


poviya vijay
ஆக 27, 2025 18:31

What bro?! Why bro?! தமிழன் திராவிடன் ஆனா bouncers எல்லாம் வடக்கன்ஸ்


Krishnamurthy Venkatesan
ஆக 27, 2025 16:50

உனக்கு 24 வயதில் இது தேவையா? உனக்கு ஸெல்ப் டிசிப்ளின்என்பதே இல்லை. வீண் விளம்பரம் போல் தெரிகிறது. இருந்தாலும் உன்னை யாரோ தூண்டிவிடுகிறார்கள் போல் தெறிகிறது.


Indhuindian
ஆக 27, 2025 16:26

எதிர் கட்சி கூட்டத்துலே ஆம்புலன்ஸை உடறதில்லயா அந்த மாதிரிதான் இதுவும்


Elango
ஆக 27, 2025 16:26

வேண்டுதல்


sundarsvpr
ஆக 27, 2025 15:34

வழக்கு எந்த பெயரில் போடப்படும் என்பது முக்கியம். நடிகர் என்ற அடைப்பு குறியில் வழக்கு பதிய முடியாது. விஜய் ஜோசப் என்ற இரண்டு பெயர்கள் உள்ளன. விஜய் மதம் மாறிவிட்டார் என்று தெரிகிறது. புதிய பெயர் ஜோசப் நடைமுறைக்கு ஒத்துவராது. ஏனென்றால் பிறப்பு சான்றிதழில் விஜய் என்றுதான் இருக்கும். விஜய் என்ற பெயரில்தான் வழக்கு பதியவேண்டும். இல்லை என்றால் வழக்கு ஏற்பு ஆகுமா என்பது சந்தேகம்.


Rajarajan
ஆக 27, 2025 14:39

அது என்ன, சினிமா நடிகர் மற்றும் அரசியல்வாதிகள் இல்லாமல், தமிழக இளைஞ்சர்களால் இருக்கவே முடியாதா ?? அவர்களிடம் ஏன் வாழ்க்கையை தொலைக்கவேண்டும் ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை