உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதலில் மறக்கப்பட்டதா ஜனனி பாடல்: பாடி முடித்து வைத்த இளையராஜா

முதலில் மறக்கப்பட்டதா ஜனனி பாடல்: பாடி முடித்து வைத்த இளையராஜா

இளையராஜாவின் இசைக் கச்சேரிகளில் பல ஆண்டுகளாக ‛ஜனனி ஜனனி ஜகம் நீ...' பாடல்தான் முதலில் பாடப்படும். சென்டிமென்ட் ஆக அந்த பாடலை இளையராஜா பாடுவது வழக்கம். இளையராஜா பங்கேற்ற கச்சேரிகளில் இதுதான் நடைமுறை. சிலசமயம், இளையராஜா குடும்ப உறுப்பினர்கள், அவருடன் இணைந்து பாடுவார்கள்.1982ல் கே.சங்கர் இயக்கத்தில் ‛தாய் மூகாம்பிகை' படத்தில் இடம் பெற்ற பாடல் இது. முதலில் இந்த பாடலை ஜேசுதாஸ் பாடினால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரிடம் எம்ஜிஆர் சொன்னாராம். ஆனால், சூழ்நிலைகள் காரணமாக இளையராஜாவே பாடினார். கர்நாடக மாநிலம், கொல்லுார் தாய் மூகாம்பிகையை போற்றும் இந்த பாடலை ஆதிசங்கரரர் பாடுவதாக காட்சி அமைந்து இருக்கும். அதனால், பாடலின் முதலில் வரும் சமஸ்கிருத வரிகள் ஆதிசங்கரரின் சவுந்தர்ய லஹரியில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கும். மீதி வரிகளை பக்திப்பூர்வமாக எழுதியவர் கவிஞர் வாலி.இளையராஜா ஜனனி பாடலை ஆர்மோனியம் வைத்து பாட ஆரம்பித்தால் கைதட்டல் விசில் பறக்கும். ஆனால், சென்னையில் நடந்த தமிழக அரசின் இளையராஜா பாராட்டு விழாவின் துவக்கத்தில் இந்த பாடல் பாடப்படவில்லை. அதற்கு பதிலாக ‛அமுதே தமிழே' என்ற பாடலை, தனது இருக்கையில் இருந்தபடியே,பாடினார் இளையராஜா. இந்த பாடல் அவர் இசையமைத்த ‛கோயில் புறா' படத்தில் இடம் பெற்றது. புலமைப்பித்தன் எழுத பி.சுசீலா, உமாரமணன் பாடியிருந்தனர். இந்த படம் 1981ல் ரிலீஸ் ஆனது.இந்த மாற்றம் பலருக்கு ஆச்சரியத்ததை கொடுத்தது. ஜனனி பாடலை எப்படி மறந்தார் இளையராஜா என்று பலரும் கேள்வி எழுப்பினர். ‛இன்று பாராட்டு விழாவில் பாடும் பாடல்கள் பட்டியலை தந்தவர் முதல்வர் ஸ்டாலின்' என்று பின்னர் விளக்கம் கொடுத்தார் கமல்ஹாசன். பொதுவாக திமுக., மற்றும் முதல்வர் ஸ்டாலின் அரசு பகுத்தறிவு கொள்கை கொண்டவர்கள் என கூறுவதால் பக்தி பாடலை தவிர்த்து இருக்கலாம். ஆனாலும், பார்வையாளர்களுக்கு இது குறையாக இருந்தது.ரஜினி, கமல், இளையராஜா பேசி முடிந்ததும், பார்வையாளர்கள் இளையராஜாவை பாட சொல்லி வேண்டுகோள் வைத்தனர். நான் தான் பாடிவிட்டேனே என்று முதலில் தயங்கிய இளையராஜா பின்னர் சற்றும் யோசிக்காமல் முதல்வர் முன்னிலையில் ‛ஜனனி ஜகம் நீ...' பாடலை உணர்ப்பூர்வமாக பாடி விழாவை நிறைவு செய்தார். பலமுறை தனது பேட்டிகளில் தனது இசை இறைவனிடம் இருந்து வருகிறது. அவன்தான் பாட வைக்கிறார் என்று கூறியிருக்கிறார். விழா ஏற்பாட்டாளர்கள் ஜனனி பாடலை மறந்திருந்தாலும், விழா முடிவில் அந்த பாடலை தவிர்க்க முடியவில்லை என கூறியபடி ரசிகர்கள் விடை பெற்றனர்.கடந்த வாரம் இந்த பாடல் பாடப்பெற்ற கொல்லுார் மூகாம்பிகை கோயிலுக்கு சென்ற இளையராஜா சில கோடி மதிப்புள்ள வைர கீரிடம், தங்கவாளை சமர்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Padmasridharan
செப் 16, 2025 10:51

அரசியல், கலைக்குள்ளும் ஊடுருவுகிறதோ சாமி, கலையரசர்களை அரசியலுக்குள் இழுத்த பின்பு..


என்னத்த சொல்ல
செப் 15, 2025 22:05

ஒரு வேளை கடவுளைவிட தமிழ் உயர்ந்ததுனு நினைத்திருப்பாரோ.


Harindra Prasad R
செப் 15, 2025 18:48

All this drama for voting purpose only that too at the election time . Bjp did by giving ராஜ்யசபா seat and what they have achieved Nothing.


Chess Player
செப் 15, 2025 18:04

இளையராஜா ஒரு சினிமா பாடல் இயற்றுபவர். அவருக்கு மாநில அரசு பரிசோ அல்லது விருதோ தரலாம் நமது மாநிலம் இவ்வளவு கடன் இருக்கும் போது மக்களின் வரி பணத்தை இவ்வாறு வீணடிப்பது தவறு சினிமா தொழிலில் இருப்பவர்கள் வேண்டும் என்றால் அவருக்கு விழா எடுக்கட்டும். வரி பணத்தில் இது செய்யக்கூடாது


Prof.Dr.H.Vijayaraghavan
செப் 15, 2025 17:11

Illayaraja is a living God. The plateform is wrong.


idea Raman
செப் 15, 2025 17:03

அத ஆரம்பித்ததே இளையராஜாதானே.


Raj
செப் 15, 2025 16:04

விழா தமிழக அரசு நடத்துவதால் சமஸ்கிரத வார்த்தை உபயோகிக்க கூடாது என்று கூட சொல்லியிருப்பார்கள்.


ஆரூர் ரங்
செப் 15, 2025 15:14

மக்கள் பிரச்சனைகளை திசை திருப்ப அ‌வ்வ‌ப்போது இது மாதிரி விழாக்களை நிகழ்த்துவார் கட்டுமரம். இப்போவும் அதே ஃபார்முலா. பட்டியலின வாக்கு வங்கிக்காக அரசு கஜானாவிலிருந்து.


Artist
செப் 15, 2025 14:12

TM சவுந்தர்ராஜனுக்கு மதுரையில் பாராட்டுவிழா நடத்தினார்கள் இப்போ இளையராஜாவுக்கு நடத்தியிருக்கிறார்கள் .. பிரபலமானவர்களை அழைத்து இவர்களையும் பாராட்டி பேசணும்ங்கிறது எழுதப்படாத விதி ..


angbu ganesh
செப் 15, 2025 14:06

அய்யா முனி அவர்களே உங்கள தைரியசாலின்னு நெனச்சேன் ரஜினி மாதிரி ஆயிட்டிங்களே முதல்வர் சொல்லி இருந்தாலும் நீங்க எப்படி ஓத்துக்கிட்டு இருக்கலாம் அவர் ஆல்லே லூயா பாட்டு பாட சொல்வர் பாடுவிங்களா வெக்கமா இருக்கு


சமீபத்திய செய்தி