உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடந்த 6 ஆண்டுகளில் இதுவே ரொம்ப அதிகம்... மீனவர்கள் கைது விவகாரம்; முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கடந்த 6 ஆண்டுகளில் இதுவே ரொம்ப அதிகம்... மீனவர்கள் கைது விவகாரம்; முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சிறைபிடிப்பு

அவர் எழுதிய கடிதம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, கடந்த 7-09-2024 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களும், அவர்களது மூன்று மீன்பிடி விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே அதிகம்

2024ஆம் ஆண்டில் மட்டும் 350 மீனவர்கள் மற்றும் 49 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன என்றும், கடந்த ஆறு ஆண்டுகளில் இதுவே மிக அதிகமானதென்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை நீதிமன்றங்கள் மீனவர்களின் சக்திக்கு மீறிய அபராதங்களை விதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே

இலங்கை அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள், தமிழக மீனவர்கள் அங்கு சிறையில் இருக்கும் காலத்தை நீட்டிக்க வழி செய்வதோடு, ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவக் குடும்பங்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பிற்கும் வழி வகுக்குமென்று தனது முந்தைய கடிதத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளதை நினைவுகூர்ந்துள்ளார்.

கூட்டம்

எனவே, இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்திடவும், கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தைக் விரைந்து நடத்திடவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mani . V
செப் 10, 2024 05:28

அதே விடுமுறைக் கடிதம்?


sankar
செப் 09, 2024 20:16

கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்த புண்ணியர்களே இதற்கு காரணம்


J.V. Iyer
செப் 09, 2024 17:22

தமிழகத்தில் நடக்கும் கொலை, கொள்ளைகள், கஞ்சா, மதுவால் பாழாகும் இளைஞர்கள், பாழான சட்டம் ஒழுங்கு, சாலைகளின் நிலைமை, கோவில்கள் இடிப்பு, லஞ்சம், பள்ளிகளின் நிலைமை, பள்ளிகளில் அழியும் தமிழ், ஹிந்துக்களை புண்படுத்தும் விரோதிகள், இவைகள் எல்லாம் உங்கள் கண்ணில் படவில்லையா? கண்ராவி


C.SRIRAM
செப் 09, 2024 15:55

இதாவது கைதுதான் . உங்க லெட்டர் இல்லாவிட்டாலும் மத்திய அரசு விடுவித்து விடும் ஏதோ உங்க கடித்ததால்தான் மத்திய ராசு நடவடிக்கை என்பது கோபுரபொம்மை கோபுரத்தை தாங்குவதாக கர்பபினை செய்வது போல உள்ளது . தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது . தினமும் ஏகப்பட்ட கொலைகள் மற்றும் இதர சட்ட விரோத செயல்கள். அதற்கு முதலில் நடவடிக்கை எடுங்கள்


Sridhar
செப் 09, 2024 15:03

நீங்க ஏன்யா கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தீங்க? எல்லைமீறி சென்றால் அந்த நாட்டு போலீஸ் பிடிச்சு உள்ளேதான் வைப்பார்கள். வேணும்னா ஒன்னு செய்யுங்க. அவுங்க, மீனவங்க மேல விதிக்கிற அபராத தொகை முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்னு ஒரு வாக்குறுதி கொடுங்க. முடிஞ்சிச்சுல்ல? மீனவங்க வோட்டை அள்ளிடலாம். அப்புறம் பணம் கொடுக்காததுக்கு ஏதாவது காரணத்தை தேடலாம். நமக்கு தெரியாததா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை