உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே: ஐகோர்ட் கிளை கருத்து

‛தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே: ஐகோர்ட் கிளை கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ‛‛ தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே. அவர்களை மீட்க மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்'' என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்து உள்ளது.இலங்கை சிறையில் உள்ள 26 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மீனவர்களை விடுவித்து தமிழகம் அழைத்து வர உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.பிறகு நீதிபதி கூறியதாவது: தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே. அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது. பிரச்னை வேறொரு நாட்டோடு தொடர்பு உடையது. மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு விரைவாக எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
ஜூலை 18, 2024 17:26

நீதிபதியின் வீட்டுக்குள் திருடர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களும் நம்மவர்கள் என்று கருணையுடன் விட்டு விடுவாரா?


PR Makudeswaran
ஜூலை 18, 2024 17:12

முதலில் நம் நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தல் சரியா??adhai கேள்வி கேட்க ஒரு நாதியும் illai


rama adhavan
ஜூலை 18, 2024 20:50

அதை சொல்லவில்லையே? ஏன்? அடுத்த நாட்டு எல்லைக்குள் நுழைவது பக்கத்து வீட்டுக்குள் நுழைவது போன்றது. அத்து மீறி அடிக்கடி நுழைந்தால் அதற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்றல்லவா தீர்ப்பு சொல்லி மனுவை தள்ளுபடி செய்து இருக்க வேண்டும். தற்போது சொன்னது என்ன தீர்ப்பு? ?


Dharmavaan
ஜூலை 18, 2024 16:54

மத்திய அரசுக்கு நீதிமன்ற புத்திமதி தேவையில்லை.இந்தியா குடிமக்கள் என்பதை புதிதாக கண்டுபிடித்து விட்டாரா


அப்பாவி
ஜூலை 18, 2024 15:22

இதுக்கே பரம்வீர் சக்ரா விருது குடுக்கலாம்.சூப்பர் கருத்து.


தத்வமசி
ஜூலை 18, 2024 15:08

நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று வழக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் நபர்களும் இந்திய குடிமக்களே. வாய்தா வாய்தா என்று இழுத்தடித்து இருபது ஆண்டுகள் கழித்தும முடியாத வழக்குகளை இது போல விரைவில் கவனித்தால் நல்லது. அவர்களும் இந்திய குடிமக்களே யுவர் ஆனர்.


தமிழ்வேள்
ஜூலை 18, 2024 14:56

கள்ளக்கடத்தல், சட்டவிரோத செயல்களை செய்பவர்களை தண்டிப்பதும் அரசில் செயல். இந்த நாட்டு அரசு செய்யாவிட்டால், அதே நீதி பரிபாலனத்தை அடுத்த நாட்டு அரசு செய்கிறது ...ஸ்ரீலங்காவை பாராட்டவேண்டும் ...


ஆரூர் ரங்
ஜூலை 18, 2024 13:42

படித்த வக்கீல்கள் மற்றும் பல முன்னாள் வக்கீல்களும் அறியாமையில் இருக்கிறார்கள். மீன் களவுதிருட்டுகளால் பாதிக்கப்படுபவர்கள் வட இலங்கைத் தமிழ் மீனவர்கள்தான். ஒரு ஏழை நாட்டின் மீனவர்களுக்கு எதிரான நிலைப்பாடு மகா பாவம். இப்போது மட்டும் தொப்புள் கொடி உறவுகள் என்பது மறந்து விடுகிறதா?


ஆரூர் ரங்
ஜூலை 18, 2024 13:36

மீன் திருடர்களும் நம் நாட்டு மக்களே. ஆளுக்கொரு பாரத ரத்னா விருது கொடுங்க.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ