உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விதி மீறினால் நடவடிக்கை உணவு பாதுகாப்பு துறை கடும் எச்சரிக்கை

விதி மீறினால் நடவடிக்கை உணவு பாதுகாப்பு துறை கடும் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் உணவு தயாரிப்பில் ஈடுபடுவோர் மற்றும் விற்பனை செய்வோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:அனைத்து உணவு வணிகர்களும் http://foscos.gov.inஇணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிழ் பெற்றிருக்க வேண்டும்அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி, மருத்துவ தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும்உணவு பொருட்களில் ஈக்கள், பூச்சிகள் மொய்க்காத வகையில், கண்ணாடி பெட்டியில் மூடி காட்சிப்படுத்த வேண்டும்சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயை ஒரு முறை மட்டுமே சமைக்க பயன்படுத்த வேண்டும்நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில், உணவு பொருளை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாதுஉணவை கையாள்வோர், கையுறை, தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்சிக்கன், பஜ்ஜி, கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு வகைகளில் செயற்கை நிறமிகள் சேர்க்கக் கூடாதுஉணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மென்ட் பேப்பர் அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்பொட்டலமிடப்பட்ட உணவு பொருட்கள் கொள்முதல் மற்றும் விற்பனையின்போது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய உரிமை எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விபரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்உணவு கடைகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்றாலோ, தயாரித்தாலோ, உணவு கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஜூன் 05, 2025 11:07

காக்கா பிரியாணிக் கடைகளில் ஆய்வு கிடையாது.


Perumal Pillai
ஜூன் 05, 2025 09:55

இதுவும் குடி குடியை கெடுக்கும் கதை தான் .


Barakat Ali
ஜூன் 05, 2025 08:53

அவங்க விதிகளைப் பொறுப்பா கடைபிடிச்சா வருமானம் கொட்டாதே சார் ???? பார்த்து செய்யுங்க ....


Padmasridharan
ஜூன் 05, 2025 07:47

hiv / aids கொண்டுள்ள ஆட்கள் உணவுகளை தயாரித்து விற்கலாமா சாமியோவ். . ஒரு தெருவுக்கு இத்தனை கடைகள்தான் இருக்கவேண்டும் என்றும் சொல்லி இருக்கலாம். எங்கு பார்த்தாலும் பிரியாணி, நூடுல்ஸ், ஆறிப்போனதையும் அழுகிபோனதையும் சூடு பண்ணி கொடுக்கறாங்க.. பழைய மாவை புதிய மாவோடு இட்லி, தோசை போடவும்தான் விக்கறாங்க. டேஸ்ட்டா சாப்பிடற மக்கள் அதுல என்ன போட்டு பன்றாங்கன்னு பாக்கறதில்ல. Its better to know the raw materials added to cook it happens only in home foods rather than eating tasty foods in public


அன்பே சிவம்
ஜூன் 05, 2025 06:56

உருப்படியான விஷயம். நடைமுறை படுத்தினால் பரவாயில்லை. பார்போம் என்ன நடக்கிறது என்று.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை