உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்சாரம் கொள்முதல் செய்திக்கு...

மின்சாரம் கொள்முதல் செய்திக்கு...

== புல் அவுட் == ஏழு மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவது ஏன்? முந்தைய தி.மு.க., அரசு, அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததாகவும், நீண்ட கால ஒப்பந்தங்கள் வாயிலாக குறைந்த விலையில் மின்சாரம் வாங்கப்போவதாக, கடந்த ஜூன் 25ல் த.வெ.க., அரசு கூறியது. ஆனால், அக்,, 12 வரை, ஒரு யூனிட் 37 ரூபாய்க்கு அவசர கதியில் மின் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்., 9ல் ஆந்திர மாநிலம், 16 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை, தனக்கான அக்., மாத தேவைக்கான மின்சாரத்தை ஒப்பந்தம் செய்து விட்டது. தமிழக அரசு ஜோசியம் பார்த்து கடைசி நேரம் வரை காத்திருந்ததா? துாத்துக்குடி, வட சென்னை ஆகிய இரு அனல் மின் நிலையங்களில், வெறும் ஐந்து ரூபாய்க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை, ஏழு மடங்கு அதிக விலை கொடுத்து, வாங்குவது ஏன்? மின் உற்பத்தி, இறக்குமதி நிலக்கரி கொள்முதல் ஆகியவற்றில், த.வெ.க., அரசு சொதப்பியதே இதற்கு காரணம். ராஜா முன்னாள் அமைச்சர், தி.மு.க.,

= புல் அவுட் ==

வெற்றி மகா வசூல்திட்டம் தொடங்கி விட்டதா?* அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:த.வெ.க., கூட்டணி அரசு அமைந்த பின், தொடர் மின் வெட்டால் மக்கள் அவதியுறுகின்றனர். இதை சாதகமாக்கி, விஞ்ஞான ஊழல் செய்ய முனைந்துள்ளனர். வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரு யூனிட் மின்சாரத்தை, 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தமிட்டுள்ளனர். ஆனால், ஆந்திர அரசு, யூனிட் ஒன்றுக்கு, 16 முதல் -20 ரூபாய் அளவுக்குதான் கொள்முதல் செய்கிறது.இப்படி அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வதால், கடனில் மின் வாரியம் மூழ்கும். இதன் வாயிலாக மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்க, த.வெ.க., அரசு திட்டமிடுகிறதோ என சந்தேகம் எழுகிறது. மின் கொள்முதலில் மெகா ஊழல் நடந்துள்ளது. த.வெ.க., அரசு, ‘வெற்றி மெகா வசூல்’ திட்டத்தை தொடங்கி விட்டதாக மக்கள் பேசுகின்றனர்.

அதிக விலையில் மின்சாரம்

யாரிடம் கையூட்டு வாங்க?• தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதி.மு.க., ஆட்சியில், யூனிட்டிற்கு 20 ரூபாய்க்கு மின் கொள்முதல் செய்தபோது, ‘மின் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்’ என, நிர்மல் குமார் தெரிவித்தார். இன்றைக்கு அவர், 37 ரூபாய்-க்கு மின் கொள்முதல் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளார்.தி.மு.க., ஆட்சியின்போது, சொந்த மின் உற்பத்தியை, 75 சதவீதம் வரை உயர்த்தியதை, 35 சதவீதமாக த.வெ.க., அரசு குறைத்துள்ளது. சொந்த உற்பத்தியை குறைத்து, வெளிச்சந்தையில் மின் கொள்முதல் செய்யும் நடைமுறையை, அமைச்சர் நிர்மல்குமார் மேற்கொள்கிறார். மின் துறையின் நிதி நிலையை சீரழிப்பது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை தடை செய்யும்.* பா.ம.க., தலைவர் அன்புமணி:வெளிச்சந்தையில், 35 ரூபாய்க்கு மின்சாரம் வாங்குவது இதுவரை இல்லாத உச்சம். வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை, 7 ரூபாய்க்கு தான் மின்சார வாரியம் விற்பனை செய்கிறது. இலவச மின்சாரத்திற்கான மானியம், இழப்பீடாக ஆண்டுக்கு 32,000 கோடி ரூபாய் என, 1.20 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். ஏற்கனவே, 2.47 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில், சொந்த மின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும்.* நா.த.க., தலைமை ஒங்கிணைப்பாளர் சீமான்:தனியார் நிறுவனங்களிடம் இருந்து, ஓர் அலகு மின்சாரத்தை, 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய, த.வெ.க., அரசு முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல், கையூட்டுக்காக, அதிக விலை கொடுத்து, தனியாரிடம் தி.மு.க., அரசு மின்சாரம் வாங்குவதாக, முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார். தற்போது, தன் ஆட்சியில், அதை விட அதிக விலை கொடுத்து, மின்சாரம் வாங்குவது, யாரிடம் கையூட்டு வாங்க?* அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்:தி.மு.க., ஆட்சியில், ஊழலுக்கு வழிவகுத்த குறுகிய கால மின் கொள்முதலைக் குறைத்து, மாதத்திற்கு 200 கோடி ரூபாய் சேமிக்க நடவடிக்கை எடுப்பதாக, வெள்ளை அறிக்கை வெளியிட்டு, அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். அதே குறுகியகால கொள்முதல் நடைமுறையை பின்பற்றி, யூனிட்டுக்கு, 35 ரூபாய் கொடுத்து அவசரகதியில் வாங்குவது, ‘மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்’ என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasan
அக் 14, 2026 01:18

பொது மக்கள் இரவில் நிம்மதியாக தூங்கவும், மாணவ மாணவியர் மாலை நேரங்களில் இடையூறின்றி பாடம் படிக்கவும், தொழிற்சாலைகள் தங்கு தடையின்றி செயல்படவும், விவசாயிகள் பயிர் வாடாமலிருக்க நீர் பாய்ச்சவும் தடையில்லா மின்சாரம் தேவையல்லவா? அதனை நிறைவேற்றும் மின்சார வாரியத்திற்கு நன்றி, தவெக அரசிற்கும் நன்றி. ஒரு சில நாட்களுக்கு, அதுவும் ஒரு சில மணி நேரங்களுக்கு தேவை படும் போது மட்டும் மின்சாரம் வாங்குவதில் தவறில்லை, அதுவே புத்திசாலி தானம். பாராட்டுகிறோம்.


முக்கிய வீடியோ