சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடா?
சென்னை: 'சில்லறை வணிகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது, சில்லறை வியாபாரிகளை பெரிதும் பாதிக்கும். இதை மத்திய அரசு கைவிடக்கோரி, பெரிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து, விரைவில் அறிவிப்போம்,'' என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார். சில்லறை வணிகத்தில், 51 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து, பகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது.வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், வண்ணாரப்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலர் மோகன், நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.