உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிச்சாவரத்தில் குள்ள நரிகள் வனத்துறையினர் உறுதி

பிச்சாவரத்தில் குள்ள நரிகள் வனத்துறையினர் உறுதி

சென்னை: கடலுார் மாவட்டம், பிச்சாவரம் அலையாத்தி காடுகள் பகுதியில், பொன்னிற குள்ளநரிகளின் நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தில், 3,652 ஏக்கர் பரப்பளவுக்கு அலையாத்தி காடுகள் உள்ளன. இப்பகுதி, ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இது பிரபலமான சூழலியல் சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. இப்பகுதியை ஒட்டி, அலையாத்தி காடுகள் பரப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறை முடுக்கி விட்டுள்ளது. பொதுவாக, அலையாத்தி காடுகள் பகுதிகளில், குள்ள நரிகள் இருப்பது வழக்கம். பிச்சாவரத்தில் படகு சவாரி செய்யும் போது, குள்ள நரிகளை பார்ப்பது அரிதான நிகழ்வாக அமைந்துள்ளது. தற்போது, அரிய வகையைச் சேர்ந்த பொன்னிற குள்ள நரிகள் பிச்சாவரத்தில் நடமாடுவது, வனத்துறையின் கள பணியாளர் குழு ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இப்பகுதியின் சூழலியல் தன்மை நல்ல நிலையில் உள்ளது என்பதை, இது உறுதி செய்வதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Techzone Coimbatore
நவ 04, 2025 17:34

அனைத்து உயிரினங்களும் காடுகளையும், தெரு நாய்களையும் , பறவைகளையும் ஒட்டுமொத்தமாக அழித்து, மனிதர்களுக்கு மட்டும் கொடுத்து விடுங்கள்


Nanchilguru
நவ 04, 2025 10:33

அரசியல்வாதிகள் காதில் விழுந்தால் நரிகள் பாடு அவ்வளவுதான்


thangam
நவ 04, 2025 08:29

Tamil நாடு பூரா திரவிட குள்ள நரிகள் தான்


ramesh
நவ 04, 2025 11:29

இந்தியா முழுவதும் ஆரிய குள்ளநரிகள் தான் நிரம்பி உள்ளது


உண்மை கசக்கும்
நவ 04, 2025 07:47

அரசியலில் தான் குள்ள நரிகள் என்றால்.. காட்டிலுமா.


John William
நவ 04, 2025 07:31

அரிய வகை விலங்குகளை பாதுகாப்பது நல்லது


சமீபத்திய செய்தி