உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தி மொழிப்பாடம் விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு: வாய்ப்பு மறுக்கப்படுவதாக முன்னாள் துணைவேந்தர் குற்றச்சாட்டு

ஹிந்தி மொழிப்பாடம் விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு: வாய்ப்பு மறுக்கப்படுவதாக முன்னாள் துணைவேந்தர் குற்றச்சாட்டு

கோவை : 'ஹிந்தி மொழிப் பாடம் விஷயத்தில் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு; அரசு எப்படி மறுக்கலாம்' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தேசிய கல்விக் கொள்கை என்பது, 21ம் நுாற்றாண்டில் இந்தியாவின் கல்வித் தேவைகளை எட்டுவதற்கு விரிவான வழிகாட்டு நடைமுறைகள் கொண்டுள்ளது. இளைஞர்களுக்கு ஆற்றல் அளிக்கும் கல்வித்தரம், புதுமையாக்கம், ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்த, பல்வேறு நுாதன நடவடிக்கைகளை இது பரிந்துரைக்கிறது.தேசிய கல்வித் திட்டம் எந்த இடத்திலும் ஹிந்தியை கட்டாய பாடமாக்கவில்லை. அரசியல் சட்டத்தில் அட்டவணை இடப்பட்டுள்ள ஏதாவது ஒரு இந்திய மொழியை, மூன்றாம் மொழியாக கற்பிக்க பரிந்துரைக்கிறது. எந்த கட்டத்திலும் ஹிந்தி திணிக்கப்படவே இல்லை.திராவிட மாடல் அரசாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு, திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் ஏதாவது ஒன்றை கற்க பரிந்துரைக்கலாம். மும்மொழித் திட்டத்தின் பாராட்டத்தக்க அம்சங்களில் ஒன்று, நாட்டில் உள்ள பல மொழிகள் கொண்ட கட்டமைப்பு சீராக இருப்பதை உறுதி செய்வதே.தேசிய கல்விக் கொள்கை குறிப்பிட்ட ஒரு மொழியை கற்க வேண்டும் என்று வலியுறுத்தாவிட்டாலும், இளைஞர்களுக்கு பலன் தரக்கூடிய, நாட்டின் பல பகுதிகளில் பேசப்படும் ஹிந்தி போன்ற மொழியை நம் மாணவர்கள் ஏன் கற்கக் கூடாது.இதனால், வேலைவாய்ப்பு, வர்த்தகம் சார்ந்து மாநிலங்களுக்கு இடையே பயணிக்க வசதி ஏற்படும். மத்திய அரசுப் பணிகள், ராணுவம் மற்றும் இதர சேவைகளில் ஈடுபடும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். ஹிந்தி, அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ள அலுவல் மொழி என்பதையும், மத்திய அரசு அதை வணிக மொழியாக ஏற்றுள்ளதையும் நினைத்துப் பார்ப்பது பொருத்தமானது.தமிழ் நீங்கலாக வேறொரு இந்திய மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்வதை, 60 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துவரும் ஒரே மாநிலம் தமிழகம்தான். இருமொழிக் கொள்கைகள் போதும் என்பதால் ஏழை, எளிய மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.அதேசமயம், மத்திய அரசு, தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேரும் பணக்கார, நகர்ப்புற மாணவர்கள் தாங்கள் விரும்பும் எந்த மொழியையும் கற்கும் உரிமை பெறுகிறார்கள். மும்மொழித் திட்டத்தை எதிர்ப்போரின் பேரக்குழந்தைகள், கொள்ளுப் பேரக்குழந்தைகள் ஹிந்தியை மகிழ்வோடு கற்கிறார்கள் அல்லது கற்றார்கள்.பல தலைவர்கள் சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்தின்கீழ் பள்ளி நடத்துகின்றனர்; அங்கு ஹிந்தி கட்டாய மொழிப் பாடம். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. ஓர் அரசு தனது மாநில மாணவர்கள் விரும்புவதை எப்படி மறுக்கலாம்.அவர்கள் ஏழைகள், அரசுப் பள்ளிகளில்தான் படிக்க முடியும் என்ற நிலை இருப்பதாலா. மக்களை ஏமாளிகளாக்க எளிய வழியை மேற்கொள்கின்றனர். சுயலாபத்துக்காக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் இந்த அரசியல்வாதிகளின் மாய்மாலத்துக்கு மக்கள் இரையாகி விடக்கூடாது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Rangan S
பிப் 23, 2025 23:28

TN poor students studying in Govt , Municipal schools are denied their right to Education by both ruling as well opposition Dravidian stocks. Their poor knowledge and fear with future vote bank, these so called Dravidian stocks vehemently playing with future of the Economically down trodden poor students. In other words these brilliant students due to their poverty pushed to the corner due to these selfishness of Dravidian stocks. This is highly condemnable. Our tall leader, our great Honble PM- Shri Modiji is trying to build future India with NEP which will rule the entire world but these Dravidian stocks are direction less. These Dravidian stocks are particular to retain their chairs and savings for their kith and kin. Hence TN poor students welcome NEP and these Dravidian stocks should change their stance. Future Younger poor brilliant Generations of TN will decide appropriately. Jai Hind. Thxs.


Sambamoorthy Balasubramanian
பிப் 23, 2025 22:41

ஊட்டலும் திணித்தலும் தாய்மையின் பண்பு பொறுமையும் திறமையும் அவர்கள் இயல்பு


Rangan S
பிப் 23, 2025 20:39

DMK as well ADMK stand against NEP is unfortunate. This deprives right to learn freely additional language for the poor economically downtrodden students persuing their studies in TN state Govt schools. This is highly condemnable. DMK as well their allies, opposition ADMK and their allies all are not bothered about future of the students instead they focus on their vote bank. NEP explores learning of one more additional Indian language. This will support all the students when they are growing up and searching for the job. Hence request DMK and state parties change their stand and search bright future for the students.


RAJENDIRAN EV
பிப் 23, 2025 10:50

இந்தி புரோக்கர்


Balasubramanian
பிப் 23, 2025 07:04

கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்தி தமிழ் மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடம் படிக்க அரசுப் பள்ளிகளில் வசதி உண்டு.


S.Govindarajan.
பிப் 23, 2025 05:58

மங்கி முகேஷ்


muthu
பிப் 22, 2025 09:51

After mastering 3 rd language say hindi what is the use in tamilnadu . When required ie just before shifting to north india learn spoken hindi in 30 days from the book or from mobile APP


NSN
பிப் 22, 2025 09:42

தமிழகம் என்னும் இந்தியப் பகுதியில், பல நூறு/ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் தெலுங்கு, கன்னட, மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட மக்களின் தாய்மொழி கல்வி உரிமையை மறுப்பது, மனித உரிமை மீறல்.


Ethiraj
பிப் 22, 2025 07:52

To remain in power or grab power politicians divide and rule citizens. They use language ,e , religion and domicile for their advantage They were taking us for a ride last 75 years. Let us put an end to it


சண்முகம்
பிப் 21, 2025 20:14

கூத்திலே கோமாளி இவர்.


புதிய வீடியோ