உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி

ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி

சென்னை:அரிசியில் மாவு சத்தும், புரதச்சத்தும் உள்ளது. நாடு முழுதும் மக்களுக்கு ஊட்டச்சத்து குறைவாக இருப்பதை, மத்திய அரசு கண்டறிந்தது. எனவே இரும்பு சத்து உள்ளிட்ட சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க உத்தரவிட்டது. செறிவூட்டப்பட்ட அரிசியானது, இரும்பு சத்து, 'போலிக் அமிலம், வைட்டமின் பி 12' போன்ற சத்துக்கள் அடங்கிய கலவையாகும். இந்தக் கலவை, அரிசி வடிவில் மாற்றப்பட்டு, 100 கிலோ அரிசிக்கு, 1 கிலோ அளவில் கலக்கப்படும்.தமிழக ரேஷன் கடைகளில், முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, கடந்த ஆண்டு முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக மாதம், 2,000 டன் என ஆண்டுக்கு, 24,000 டன் ஊட்டச்சத்து கலவை தயாரிக்கும் பணியில் நுகர்பொருள் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ