உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

துாய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.சென்னை தலைமை செயலகத்தில் , தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில், புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட, பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.அதன்பின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:துாய்மை பணியாளர் நலனில், இந்த அரசு பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறது. அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து துாய்மை பணியாளர்களுக் காக, பல்வேறு சிறப்பு நல திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். துாய்மை பணியாளர்கள் குப்பையை கையாளும்போது ஏற்படும் நுரையீரல், தோல் தொடர்பான தொழில்சார் நோய்களை கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும், தனி திட்டம் செயல்படுத்தப்படும் து ாய்மை பணியாளர்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் அளவிற்கு காப் பீடு இலவசமாக வழங்கப்படும்.இதன் வாயிலாக, பணியின்போது இறக்க நேரி டும் துாய்மை பணியாளர் களின் குடும்பங்களுக்கு நல வாரிய நிதியுதவியுடன், 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் துாய்மை பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் சுயதொழில் துவங்கும்போது, திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம், அதிகபட்சமாக 3.50 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.கடன் தொகையை தவறாமல் திருப்பி செலுத்து வோருக்கு, 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும், 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் துாய்மை பணியாளர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும், அவர்களுக்கு கட்டண சலுகை மட்டுமன்றி, விடுதி, புத்தக கட்டண உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத துாய்மை பணியாளர்களுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் என, 30,000 குடியிருப்புகள் கட்டி தரப்படும்.கிராமப் பகுதிகளில் வசிக்கும் துாய்மை பணியாளர்களுக்கு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பணியில் ஈடுபடும் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.இந்த ஆறு முக்கியமான அறிவிப்புகளை, துாய்மை பணியாளர்களின் நலனுக்காக, முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் முடி வெடுத்து அறிவித்துள்ளார்.எனவே, துாய்மை பணியாளர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு, பணிகளுக்கு திரும்ப வேண்டும் என, அரசின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Ramesh Sargam
ஆக 16, 2025 22:06

ஏன் இலவசம்? அது இலவசம் என்று யார் சொன்னது? எல்லாம் மக்கள் வரி பணத்தில் இருந்து. இப்படி கொடுப்பதற்குப்பதில், அவர்களின் வேலையை நிரந்தரம் செய்து, நல்ல சம்பளம் கொடுக்கலாமே


ஆரூர் ரங்
ஆக 15, 2025 22:14

காலை உணவு எனும் அல்வா?


சூரியா
ஆக 15, 2025 20:31

அத்தனை ஊழியர்களுக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தம், அந்தந்த ஏரியா கவுன்சிலர் வசம் போகும். சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கா பணம் கதைதான். இது தேவையா? யாராவது காலை உணவு கேட்டார்களா? அப்படிக் கொடுத்தே தீருவோம் என்றால், அதற்காக ஒரு அலவன்ஸைக் கொடுக்கவும்.


Ram pollachi
ஆக 15, 2025 12:22

பணி நிரந்தரம் ஆகிய ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏரியாவுக்கு வராமல் சில கூலி ஆட்களை நியமித்து விட்டு பெரிய நிறுவனங்கள், மால்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளில் நல்லா சம்பாதிக்கிறார்கள்... காலை முதல் மாலை வரை குடி தான் பிரதானம். மாதம் ஐம்பது ஆயிரம் ஊதியம் வாங்கும் ஊழியர்கள் உண்டு... கையெழுத்து போட்டுவிட்டு சொந்தமாக வைத்துள்ள கார், ஆட்டோவை ஓட்டி வசதியாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள். பலரின் டெபிட் கார்டு, வங்கிகள் புத்தகம் எல்லாம் கந்துவட்டி கடையில் இருக்கும்... வீதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஜனங்களுக்கு இல்லை.


seshadri
ஆக 15, 2025 12:09

ஏன் அவர்கள் இலவசம் கேட்டார்களா? ஏன் இப்படி எல்லோரையும் பிச்சை காரர்கள் ஆக்குகிறீர்கள். நம் நாடு கெடுவதற்கு இந்த தேவை இல்லாத இலவசங்கள் காரணம். இது என்று மறையும் என்று தெரியவில்லை.


திகழ்ஓவியன்
ஆக 15, 2025 11:59

கண்டிப்பா மீண்டும் சூரியனுக்கு தான் போடுவோம், ஒரு லட்சம் அரசு ஊழியர் வீட்டில் அவர்கள் குழந்தைகள் எதிரே அடித்து இழுத்து வந்தார்களே அதை மறந்து விட்டீரா இங்கு கோர்ட் உத்தரவு படி மாலையில் ஒரு அதிகாரி மைக் இல் கோர்ட் உங்களை அப்புறப்படுத்த உத்தரவு போட்டுள்ளது களைந்து செல்லுங்கள் என்று 10 நிமிடம் ஒரு முறை தெரிவிக்கிறார் , போராட்ட குழு தலைவர்கள் உடன் பேச 100 மீட்டர் இல் மந்திரிகள் 3 மணி நேரம் காத்திருப்பு அனால் அவர்கள் KM கடந்து சென்று VIJAY சந்திக்க செல்லுகிறார்கள் இப்படி மொத தவறும் அவர்கள் இடம் , இதில் அரசை குறை கூறி என்ன பயன்


திகழ்ஓவியன்
ஆக 15, 2025 11:44

அனைத்து மண்டலம் தொழிலாளர் வேலை செய்யும் போது இந்த இரண்டு மண்டலம் மட்டும் போராட யார் காரணம் யார் தூண்டுதலுக்கு விலை போனார்கள் முதல்வர் மேயர் அமைச்சரை கொலை குற்றவாளி ஆக்க தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்த அந்த தொழிலாளி அவளுக்கு பணி தொடர அனுமதிக்க கூடாது: முதலில் பிளாக் மெயில் செய்வதை நிறுத்த வேண்டும்.. போராட்டம் எந்த பயனும் தராது..ஒரு சோசியல் மீடியா இதை வைத்து கலைஞரை அவதூறு பேசுவத எதற்காக இதனால் என்ன பயன்.. தனியார் நிறுவனம் வேலை தருவதாக உறுதி கூறிய பிறகும் பிளாக் மெயில் செய்வது எதனால் யார் தூண்டுதலால்..


vivek
ஆக 15, 2025 12:17

வாழ்த்துக்கள்....இலவச காலை உணவு திட்டத்தில் நீங்களும் சேர்க்கப்படுவீர்கள்..


திகழ்ஓவியன்
ஆக 15, 2025 12:41

அப்படியா அப்போ எனக்கு முன்னர் தட்டோடு நீர் நிர்ப்பீரோ


G Mahalingam
ஆக 15, 2025 11:36

திமுக கொண்டு வருகிற திட்டம் எல்லாம் கமிஷன் அடிப்படையில் தான் இருக்கும். உணவு அலோவன்ஸ்சாக மாதம் 2000 கொடுத்தால் நல்லது. வெளியே டீ-பன் 50 ரூபாயில் முடிந்து விடும்.


rasaa
ஆக 15, 2025 11:19

இதைத்தான் சத்யராஜ் அல்வா என்று சொல்வார்கள். இனி அவர்களையும் ஓசி சோறு என்று அழைப்பார்கள்.


Chandru
ஆக 15, 2025 10:56

ஓசி ஒசி ஓசி தேவையா மக்களே நீ யோசி .


புதிய வீடியோ