உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாம் படிக்காத சுதந்திர போராட்ட வரலாறு: கவர்னர் ரவி வேதனை

நாம் படிக்காத சுதந்திர போராட்ட வரலாறு: கவர்னர் ரவி வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ஆயிரக்கணக்கான மக்கள் துணிச்சலுடன் போராடி உயிரையும், ரத்தத்தையும் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத் தந்தனர். இந்த வரலாறு குறித்து நாம் இன்னும் படிக்கவில்லை,'' என கவர்னர் ரவி கூறினார்.சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது: 2021 ல் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பட்டியலை நான் கேட்டேன். அதற்கு தமிழக அரசு 30 பேர் கொண்ட பட்டியலை வழங்கியது. நாகாலாந்தில் ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளபோது, தமிழகத்தில் 30 பேர் தான் என்பது ஆச்சர்யமாக இருந்தது.ஆங்கிலேயர்கள் நமது சுயகவுரவத்தை அழித்தனர். பிரிட்டனில் பாதிரியாராக இருந்த ஜேம்ஸ் மில் என்பவரை அழைத்து இந்தியாவின் வரலாற்றை ஆங்கிலேயர்கள் எழுத வைத்தனர். அவர் இந்தியாவிற்கு வராமலேயே, ' இந்தியர்கள் அனைவரும் கோழைகள். அடிமைகளாக இருக்க தகுதி பெற்றவர்கள். ஆண்மையற்றவர்கள்' , ' ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் சிறந்தவர்கள்' என புத்தகம் எழுதினார். இந்த புத்தகம் தான் ஆங்கிலேயர்களின் பாட புத்தகமாக இருந்தது. இந்தியாவில் பணிபுரிய விரும்பிய ஆங்கிலேயர்கள் இந்த புத்தகத்தை படித்தனர். படித்ததை வைத்து தேர்வில் தேர்ச்சி பெற்று இங்கு வந்து பணியாற்றினர். ஆங்கிலேயர்கள் நடத்திய கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இந்த புத்தகம் தான் பயன்படுத்தப்பட்டது. இந்தியர்கள் யார் என்ற சுய கவுரவத்தை அழிக்க சதி செய்து ஆங்கிலேயர்கள் அதில் வெற்றியும் பெற்றனர். பல தலைமுறைகள் கடந்தும், மக்கள் இதனை நம்ப துவங்கினர். இதை படித்தே பட்டம் பெற்று ஆங்கிலேயர்கள், கிழக்கு இந்திய நிறுவனங்களில் பணியாற்றினர். நமது கல்வி முறை, தொழிலை அவர்கள் அழித்ததால், நமது மக்கள் கிழக்கு இந்திய கம்பெனியை சார்ந்து இருந்தனர். இதனால், வேலைக்கு செல்ல நமது மக்கள் இந்த பாடத்தையே படித்தனர்.இன்றும் நாம் அதில் இருந்து விடுபடவில்லை. நமது மண்ணில் ஆங்கிலேயர்களை சிறந்தவர்களாக பார்க்க வைக்கப்பட்டனர். பல்கலைகள், கல்லூரிகளில் எம்.ஏ., மற்றும் பி.ஏ., பட்டங்களில் கலாசாரம், வரலாறு, அரசியல் அறிவியல் பாடதிட்டத்தில் ஆங்கிலேயர்களை பற்றியும், அவர்களை புகழ்ந்தும் கற்பிக்கப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி கற்பிக்கப்படவில்லை.20ம் நூற்றாண்டில் திராவிட தலைவர்களை பற்றி சொல்லப்படுகிறது. தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி இல்லை. இன்றும் ஆங்கிலேயர்கள் தான் சிறந்தவர்கள் என நமது மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. 'நாம் அடிமைகளாக இருக்க வேண்டியவர்கள். அனைத்தும் நமது தவறு. நம்மை அடிமைப்படுத்தி ஆங்கிலேயர்கள் நல்லதை செய்தனர்' என சொல்லிக் கொடுக்கின்றனர்.ஆயிரக்கணக்கானோர் இந்த மண்ணின் விடுதலைக்காக போராடி தங்களது உயிரை தியாகம் செய்தனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் நேதாஜியின் இந்திய தேசியப்படையில் இணைந்தனர். 19 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் 10 லட்சம் மக்களை அடிமைகளாக மாற்றி பர்மா, மலேஷியா, இலங்கை , பிஜி, மொரிஷியசுக்கு அழைத்துச் சென்று தங்களது நிறுவனத்தில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்ற வைத்தனர். இது பற்றி பாடப்புத்தகத்தில் இல்லை. ஆனால், 'ஆங்கிலேயர்கள் வந்த 19ம் நூற்றாண்டு சிறந்த காலம். அவர்கள் தான் சமூக நீதியை கற்றுக் கொடுப்பதாக' இன்றும் கற்றுக் கொடுக்கின்றனர்.நமது கதாநாயகர்கள், தியாகிகள், உயிர் தியாகம் செய்தவர்களை மறந்தால் அந்த சமூகத்திற்கு எதிர்காலம் கிடையாது. அந்த சமூகம் நன்றியற்ற சமுதாயம் ஆகும். அந்த நன்றியற்ற சமூகம், நன்றியற்ற மக்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்காது. நமது மண்ணில் ஆயிரக்கணக்கானோர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக உயிர்தியாகம் செய்துள்ளனர். அவர்களை கண்டு ஆங்கிலேயர்கள் பயந்துள்ளனர். நாட்டிற்கு சுதந்திரம் எப்படி கிடைத்தது என்பது குறித்து நாம் இன்னும் படிக்க வேண்டி உள்ளது. உண்ணாவிரத போராட்டம் மூலம் நமக்கு சுதந்திரம் கிடைத்ததாக கற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரையும், ரத்தத்தையும் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத்தந்தனர். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

pmsamy
நவ 13, 2024 10:55

நீயே படிக்காத விஷயத்தை ஏன் பேசுற அறிவு இருக்கா


அப்பாவி
நவ 13, 2024 08:54

சீக்கிரமா இவிங்களைப் பத்தி உ.பி பாடத்திட்டத்தில் பாடம் சேருங்க. அவிங்கதான் நம்மைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்.


MUTHU
நவ 13, 2024 08:30

ஆரம்பகாலங்களில் இந்திய சுதந்திர போராட்டம் என்பது இஸ்லாம் vs பிரிட்டன் இந்துக்கள் vs பிரிட்டன் என்று தான் இருந்தது. இலக்கற்றதாய் இருந்தது. இதிலே இந்து மன்னர்கள் இஸ்லாம் மன்னர்களை எதிர்த்தும் போராட்டம் செய்து கொண்டிருந்தனர். பொதுவாக சுதந்திர போராட்டத்திற்கு பின் பழைய இஸ்லாம் ஆட்சியாளர்களை பற்றிய கொடூர வரலாற்று உண்மைகள் பெரும்பான்மை மக்களிடம் அதிருப்தியாக மாறிவிடக்கூடும் என்பதால் அந்த உண்மைகளை மறைக்க முயலும்பொழுது இந்து மன்னர்களின் மற்ற ஆங்கிலேய எதிர்ப்பு செயல்பாடுகளையும் மறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் இதிலே சோகம் என்னவென்றால் திப்பு சுல்தான் ஆங்கிலேய எதிர்ப்பு பற்றி மக்கள் மனதில் விதைத்த அளவு கூட மற்ற மன்னர்களின் ஆங்கிலேய எதிர்ப்பு பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. தற்சமயம் இதை சொன்னாலும் மரமண்டை மாணவர்களிடம் இதை பற்றிய எந்த உணர்வும் ஏற்படுவதில்லை.


Kasimani Baskaran
நவ 13, 2024 05:58

ஈரவெங்காயம் கண்டிப்பாக அந்த லிஸ்டில் இருப்பார். திராவிடப் பொய்களும் பிரிட்டிஷ் ஆட்சிக்கால பொய்களும் ஓரளவுக்கு ஒத்துப்போகும்.


AMLA ASOKAN
நவ 12, 2024 23:49

நம் நாட்டின் வேலை இல்லா இளைஞன் எதிர்காலத்தை பற்றி கவலை பட்டுக் கொண்டிருக்கிறான் . ஆளுநர் ரவி கடந்த கால தியாகங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் . இளைஞன் வெயிலில் வேலை தேடி அலைகிறான் , ஆளுநர் ராஜபவனில் AC ரூமில் துயில் கொண்டிருக்கிறார் . ஆங்கிலேயர் காலத்து புதுமையான சரித்திர தகவல்களை ஆங்கிலத்தில் அடிக்கடி பகர்ந்து கொண்டு வருகிறார் . சுய விளம்பரம் என புரிய முடிகிறது .


vadivelu
நவ 13, 2024 07:35

ரொம்ப கசுக்குது இல்லை, உண்மை அப்படிதான் கசக்கும்.


PerArivalan
நவ 12, 2024 21:38

உண்மை... சத்தியம்...


PalaniKuppuswamy
நவ 12, 2024 21:25

மிகவும் உண்மையான ஆனால் வேதனையான செய்திதான். திரவிஷம் .. நாட்டிற்காக வாழ்ந்த தேசபக்தர்களை மறக்கடித்து விட்டது. வெளிநாட்டு ஊடுருவல் எச்சங்களின் கூட்டாளி திராவிடம்.


Sundar R
நவ 12, 2024 21:22

நான்கு வருடங்களுக்கு முன்பு நீங்கள் வந்தவுடனேயே கருணாநிதி குடும்பத்தினரை தமிழகத்தை விட்டு வெளியே அனுப்பி வைத்திருந்தால் இப்போது இந்த சப்ஜெக்ட்டைப் பற்றி கவலையுடன் பேச வேண்டிய அவசியம் இருந்திருக்காது.


R.Subramanian
நவ 12, 2024 21:18

நம்மூரில் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு கோரிக்கை வைக்க வேண்டியே உள்ளது ஆனால் கொடுமைகளை செய்த ஆஷ் துறைக்கு மணிமண்டபம்


RAMAKRISHNAN NATESAN
நவ 12, 2024 20:47

நாகாலாந்தில் ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளபோது, தமிழகத்தில் 30 பேர் தான் என்பது ஆச்சர்யமாக இருந்தது .............. தெலுங்கு மொழி பேசுபவர் மெட்றாஸ் மாகாணத்தை ஆண்டுக்குங்க ன்னு வெள்ளையர்களிடம் கேட்டுக்கிட்டான் ..... அதனாலதான் டுமீலு நாட்டுல போராட்டம் வலுக்கலை .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை