உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1,000 ஆண்டு கோவில் சுவரை இடித்து புதையல் தேடிய கும்பல் தப்பியோட்டம்

1,000 ஆண்டு கோவில் சுவரை இடித்து புதையல் தேடிய கும்பல் தப்பியோட்டம்

வேலுார்: வேலுார் அருகே 1,000 ஆண்டு பழமையான கோவில் சுவரை இடித்து, புதையல் தேடிய கும்பல் பற்றி புகார் அளிக்கப்பட்டு உள்ளது.வேலுார் மாவட்டம், ஊசூர் அடுத்த சிவநாதபுரத்தில், வனத்துறை கட்டுப்பாட்டில் கைலாசகிரி மலை உள்ளது. இதன் மீது, 1,000 ஆண்டு பழமையான கைலாசநாதர் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் பராமரிப்பின்றி உள்ளது. இங்கு புதையல் உள்ளதாக நீண்ட நாட்களாக வதந்தி பரவியது. இதையறிந்த, 10 பேர் கும்பல், மூன்று நாட்களாக அங்கு, 'டென்ட்' அமைத்து, சமைத்து சாப்பிட்டு, கோவிலில் உள்ள கருங்கல்லால் ஆன சுவரை ஆங்காங்கே உடைத்தும், கோவிலை சுற்றி பள்ளம் தோண்டியும் புதையலை தேடி உள்ளனர். அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஆடு, மாடு மேய்க்க மலை மீது சென்றபோது, அவர்களை கண்டு அதிர்ச்சியடைந்து, கேள்வி எழுப்பியபோது, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

ஆடு, மாடு மேய்ப்பவர்களையே கண்டிக்கும் வனத்துறையினர், மர்ம கும்பல் மூன்று நாட்களாக தங்க எவ்வாறு அனுமதித்தனர் என, சர்ச்சை எழுந்தது.அந்த கும்பலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, வனத்துறையினரிடம், வேலுார் மாவட்ட ஹிந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் நேற்று மனு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

subramanian
பிப் 14, 2025 07:56

பாரத கோவில் கோயில்களை, இந்திய மக்களை கொள்ளயடிக்கும் தேசவிரோத திமுக ஒழியட்டும்.


Bhaskaran
பிப் 13, 2025 16:45

வனத்துறை மற்றும் அறக்கொள்ளைத்துரை கூட்டு கொள்ளை முயற்சி


சிந்தனை
பிப் 13, 2025 14:43

என்னங்க முன்னாடியே போலீசுக்கு கமிஷன் கொடுத்துட்டீங்களா இல்லையா ஒழுங்கா குடுத்துட்டு தொழில் பண்ணுங்க இல்லைன்னா மாட்டிப்பீர்கள்


M.COM.N.K.K.
பிப் 13, 2025 10:19

புதையல் கிடைத்தால் இத்தனை சதவீதம் எங்களுக்கு என்று ஒப்பந்தம் அங்கிருக்க வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது. மேலிடம் ஏதும் இதில் தொடர்பு இருக்க வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது. அநேகமாக விசாரணை என்று சொல்லி நாடகமாடி இதை முற்றிலும் மறைக்கவே வாய்ப்பு அதிகம்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 13, 2025 10:03

பகலிலேயே சரக்கடித்துவிட்டு மறைவிடங்களுக்குச் சென்று உறங்குவது வன்ன டுறையின் பலர் அன்றாடம் நடத்தும் செயல் ....


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 13, 2025 09:38

வனத்துறையே டென்ட் அமைத்து தேடியதோ என்னமோ. எந்த துறையில் எந்த புதையல் உள்ளது யார் அறிவார்.


கிஜன்
பிப் 13, 2025 07:22

மாடலை நம்பி ஓட்டு போட்டு விட்டு இப்போ கூவுரீங்க. நாளை நமதே 234 லும் நமதே...


Kasimani Baskaran
பிப் 13, 2025 07:20

சிறப்பான நிர்வாகத்துக்கு பாராட்டுகள்... நல்லவேளையாக அந்த சிவனே ஆடுமேய்ப்பவனாக வந்து கோவிலை காத்திருக்கிறார்...


VENKATASUBRAMANIAN
பிப் 13, 2025 07:07

காசு வாங்கி கொண்டு விட்டிருப்பார்கள். சஸ்பெண்டு செய்யவேண்டும்.


நிக்கோல்தாம்சன்
பிப் 13, 2025 06:12

இதுதான் நம்ம அரசு அதிகாரிகளின் லட்சணம்


முக்கிய வீடியோ