வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதிலும் செல்வாக்கு பயன் படாது என்ன நிச்சயம்
மதுரை : 'வி.ஏ.ஓ.,க்களுக்கு கலந்தாய்வு உள்ளது போல இளநிலை உதவியாளர் முதல் தாசில்தார் வரையான பணியிடங்களுக்கும் பொது கலந்தாய்வு முறையில் இடமாறுதல் வழங்க வேண்டும்' என தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழக வருவாய்த்துறையில் இடமாறுதல் நடவடிக்கை ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு விதமாக உள்ளது. வி.ஏ.ஓ.,க்களுக்கு கலந்தாய்வு இருப்பது போல மற்றவர்களுக்கு இல்லை. அவரவர் விருப்பம்போலவும், அமைச்சர், மாவட்ட நிர்வாகம், சங்க நிர்வாகிகள் செல்வாக்கை காட்டியும் வேண்டிய இடங்களுக்கு இடமாறுதல் பெற்றுச் சென்று விடுகின்றனர்.பொது விநியோகம், கலால், கனிமவளம், முத்திரைத்தாள், கலெக்டர் அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவுகள் என, பணிப்பளு குறைவாக உள்ள பணியிடங்கள், வருவாய் தரும் பணியிடங்களுக்கு செல்லவே விரும்புகின்றனர். இவர்களில் பலர் தாலுகா அலுவலகங்களில் உள்ள ரெகுலர் பணியிடங்களுக்கு வருவதில்லை. இதனால் செல்வாக்கு இல்லாத தாலுகா அலுவலக ஊழியர்கள் இடமாறுதலே பெற முடியாமல் போகிறது. இதனால் நிர்வாக சீர்கேடு நடக்க ஏதுவாகிறது.இதனால் தங்களுக்கும் (பணி மூப்பு) 'சீனியாரிட்டி' அடிப்படையில் பொது கலந்தாய்வு முறையில் இடமாறுதல் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயகணேஷ் கூறியதாவது: வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர்கள், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணைத்தாசில்தார், தாசில்தார்கள் பணியிட மாறுதல் 'செல்வாக்கின்' அடிப்படையில் நடக்கிறது. இதனால் ஒரே இடத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுவோரும் உள்ளனர். இது மிகப்பெரிய நிர்வாக சீரழிவுக்கு காரணமாகிறது. எனவே நிர்வாக நலன் கருதி, வி.ஏ,ஓ.,க்களுக்கு நடத்துவது போன்று, ஆண்டுக்கு ஒருமுறை மேற்கண்டவர்களுக்கும் பொதுக் கலந்தாய்வு மூலம் மட்டுமே பணியிட மாறுதல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதிலும் செல்வாக்கு பயன் படாது என்ன நிச்சயம்