உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடு மேய்க்க கடத்தப்பட்டவர் மைனரா: ஐகோர்ட் கேள்வி

ஆடு மேய்க்க கடத்தப்பட்டவர் மைனரா: ஐகோர்ட் கேள்வி

மதுரை : சிவகங்கையில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு கொத்தடிமையாக கடத்தப்பட்ட சிறுவன், மைனர் என்பதை நிரூபிக்க தேவையான சான்றிதழ்களை தாக்கல் செய்ய தாயாருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த மாதவி தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு:இரண்டாவது மகன் பாலமுருகனை(17), ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வழங்குவதாக கூறி, ஆடுமேய்க்கும் தொழிலுக்கு, சிவகங்கை மாவட்டம் பழையனூரை சேர்ந்த காயாம்பு அழைத்து சென்றார். அங்கு மகனை கொத்தடிமையாக நடத்தினர். மகன் அங்கிருந்து தப்பி வந்தார். காயாம்பு தூண்டுதல்பேரில் வீட்டிற்கு வந்த பழையனூர் இன்ஸ்பெக்டர், என் கணவரை அழைத்து சென்றனர். அவரிடம் ரூ.40 ஆயிரம் வாங்கி கொண்டனர். மேலும் ரூ.ஒரு லட்சம் கேட்டு மிரட்டுகின்றனர். நாகப்பட்டினத்திற்கு சென்ற பாலமுருகன் கடத்தப்பட்டார். அவர் தற்போது வேலு என்பவர் கஸ்டடியில் உள்ளார். அவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

மனு நீதிபதி ஜனார்த்தனராஜா, சுந்தரேஷ் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சி.ரமேஷ் ஆஜரானார். பாலமுருகன் மைனர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காயாம்பு, வேலு தரப்பில் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாலமுருகன் மைனர் என்பதை நிரூபிக்க தேவையான சான்றிதழ்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை