உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது; உயர்நீதிமன்றத்தில் வாதம்

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது; உயர்நீதிமன்றத்தில் வாதம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது என 3 வது நீதிபதி விசாரணையில் கோயில் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.இதுபோல் பரமசிவம் மற்றொரு மனு செய்தார்.ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம்,'பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். தடை விதிக்க வேண்டும்,' என மனு செய்தார்.திருப்பரங்குன்றம் அப்துல் ஜாபர்,'தர்கா, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.திருப்பரங்குன்றம் ஒசீர்கான்,'மலையிலுள்ள தர்கா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தில் அதிகாரிகள் தலையிடக்கூடாது.அப்பகுதியில் சீரமைப்பு, கட்டுமானப் பணி மேற்கொள்வதை தடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்,' என்று மனு செய்தார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மேல்சித்தமூர் ஜினா காஞ்சி ஜெயின் மடம் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமிசேனா பட்டாரக் பட்டாச்சாரிய மகா சுவாமிகள்,'திருப்பரங்குன்றம் மலையில் சமணர்கள் வாழ்ந்ததற்கான படுகைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன.அவற்றை பாதுகாக்க மலையை சமணர் குன்று என அறிவிக்க உத்தரவிட வேண்டும்,'என்று மனு செய்தார்.இவ்வழக்குகளை ஏற்கனவே நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.ஜூன் 24ல் நீதிபதி ஜெ.நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.நீதிபதி எஸ்.ஸ்ரீமதி,'சோலை கண்ணன், பரமசிவம், ராமலிங்கம் மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஒசீர்கான் மனு பைசல் செய்யப்படுகிறது.இதர மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன,' என உத்தரவிட்டார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்ததால் 3 வது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர் நேற்று விசாரித்தார்.சோலை கண்ணன், பரமசிவம், ராமலிங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் கார்த்திகேய வெங்கடாஜலபதி, ராமகிருஷ்ணன், நிரஞ்சன் எஸ்.குமார்: சிக்கந்தர் மலை என்பதற்கு எந்த ஆவணமும் இல்லை. மலை சிவலிங்க வடிவில் உள்ளதாக லண்டன் பிரிவி கவுன்சில் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆடு, கோழி பலியிடும் நடைமுறை ஏற்கனவே இல்லை. புதிதாக புகுத்த முயற்சிக்கப்படுகிறது. சமூக வலை தளத்தில் தவறான கருத்து பரப்பப்பட்டது.கோயில் தரப்பு வழக்கறிஞர் மனோகரன்: மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது.நீதிபதி: அறநிலையத்துறை நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மலையின் எல்லைகள் நிர்ணயம் தொடர்பாக வரைபடம் தேவைப்படுகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி ஜூலை 31 க்கு வழக்கை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S.jayaram
ஜூலை 29, 2025 18:58

இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்கும் இவர்களை மேலேயுள்ள தர்காவை கீழே வேறு இடத்திற்கு மாற்றி விடச்சொல்லுங்கள். அல்லது சுதந்திரத்திற்கு முன் என்ன நிலை இருந்ததோ அதை கடை பிடிக்க உத்தரவிடவேண்டும். மேலும் இதில் வேறு.மாவட்டங்களை சேர்ந்தவர்கள் யாரும் இப்பிரச்னையில் தலையிடக்கூடாது. கோவில் நிர்வாகம், அதை சார்ந்த இந்து மதவழிபடுவோர்கள், தர்காவை நிர்வகிக்கும் ஜமாஅத் மற்றும் அதன் உறுப்பினர்கள், தொல்பொருள் துறை, ஜெய்னமதத்தை சார்ந்த பிரதிநிதிகள் ஆகியோர் மட்டுமே இதில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி கோவில் எல்லையில் பலியிடக்கூடாது. மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தம் அங்கு தெரிந்தோ தெரியாமலோ தர்கா உருவாக்கப்பட்டுவிட்டது. எனவே அங்கு சென்று வழிபடும் உரிமை தவிர வேறெந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. கீழே உள்ள அவர்களின் பள்ளிவாசல்களில் மற்ற சடங்குகளை செய்து கொள்ளலாம் இதுவே இதற்கு தீர்வு. உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் எங்கும் சந்தனக்கூடு திருவிழாநடைபெறுவதில்லை ஆனால் அதை இவர்கள் இங்கே மத உரிமை என்கிறார்கள்.


ameen
ஜூலை 30, 2025 07:36

ஆமாம் நீ சொன்னது சரிதான்


Mettai* Tamil
ஜூலை 29, 2025 09:44

ஒரு 500 வருசத்துக்கு முன்பு கோயில் சொத்தை கொள்ளையடிக்க வந்த சுல்தான் சிக்கந்தர் ..2000 வருசத்துக்கும் மேலாக இருக்கும் தமிழ் கடவுள் முருகன் .....


அருண் பிரகாஷ் மதுரை
ஜூலை 29, 2025 08:51

இந்த விவகாரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் எழுத்துப்பூர்வமாக எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.இதுதான் திராவிட மாடல்.


Kumar Kumzi
ஜூலை 29, 2025 07:25

மூர்க்க காட்டேரிகளுக்கு இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பான் என்பது எவ்வளோ உண்மை மத்திய அரசாங்கம் கூடிய சீக்கிரமே இந்தியாவை ஹிந்து தேசமாக அறிவிக்க வேண்டும்


V RAMASWAMY
ஜூலை 29, 2025 10:06

Nothing but vote bank politics, but creating a dangerous situation for our motherland.


Svs Yaadum oore
ஜூலை 29, 2025 06:36

திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. பழநி ஆண்டவர் கோயில் மலை பாதை வழியாக காலம் காலமாக காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வேல் எடுத்து செல்லப்படுகிறது.மலை அடிவாரத்தில் குடி கொண்டிருக்கும் முருகப்பெருமானின் தலைக்கு மேல் நாங்கள் ஆடு வெட்டுவோம் என்று சொல்வது முருகப்பெருமானை இழிவுபடுத்தி அவமானப்படுத்தும் செயல். ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையையும், மரபுகளையும் பறிக்கும் செயலாகும் .....


Svs Yaadum oore
ஜூலை 29, 2025 06:30

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கந்தர்மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதும், காலண்டரில் சிக்கந்தர் மலை என்று அச்சிடுவதும், விளம்பரங்களில் சிக்கந்தர் மலை என்று போஸ்டர் அடித்து ஒட்டுவதும், காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை தடுப்பதும் போன்ற காரியங்களை செய்வது யார் ??......அதற்கும் மேல் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று அழைத்தது நாம் தமிழர் ....


சமீபத்திய செய்தி