உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடவுளையும் கட்சிகளுக்கான அரசியலாக பார்க்கின்றனர்: சீமான் வருத்தம்

கடவுளையும் கட்சிகளுக்கான அரசியலாக பார்க்கின்றனர்: சீமான் வருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: ''தேர்தல் வரும்போது மட்டும் இவர்களுக்கு (திமுக.,வுக்கு) முருகன் மீது பக்தி, அவர்களுக்கு (பா.ஜ.,வுக்கு) ராமர் மீது பக்தி. இங்கு கடவுளையும் கட்சிகளுக்கான அரசியலாக பார்க்கின்றனர்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பா.ஜ., எப்போது முருகன் பக்கம் வந்துள்ளது? இங்க வந்தா முருகன்.. அங்க போனா ஐயப்பன்.. ஒடிசா போனா பூரி ஜெகன்னாதர். திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் ஆட்சி தான் என அமைச்சர் ரகுபதி பேசுகிறார். ராமர் ஆட்சி இவ்வளவு கேவலமாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? சாராயத்தால் இறப்பது, தினமும் கொலைகள் நடைபெறுவது, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வன்புணர்வு செய்து கொலை செய்வது எல்லாம் இந்த ஆட்சியில் நடைபெறுகிறது. இது கடவுளின் ஆட்சியா? தைப்பூசத்திற்கு முன்பெல்லாம் பொது விடுமுறை விடவில்லை. நான் பேசிய பிறகு, என் முயற்சியால்தான் இபிஎஸ் ஆட்சியில் தைப்பூசத்திற்கு விடுமுறை விடப்பட்டது. ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகள் அல்லாமல் இப்போது முருகன் மாநாடு நடத்துகின்றனர். இப்போது திமுக.,வுக்கு திடீரென முருகன் மீது பக்தி வந்துள்ளது. தேர்தல் வரும்போது மட்டும் இவர்களுக்கு (திமுக.,வுக்கு) முருகன் மீது பக்தி, அவர்களுக்கு (பா.ஜ.,வுக்கு) ராமர் மீது பக்தி. இப்போது ஏன் பா.ஜ.,வினர் ராமர் பற்றி பேசுவதில்லை? கோயில் கட்டி முடித்துவிட்டார்கள், அந்த இடத்திலேயே பா.ஜ., தோற்றுவிட்டது. அதனால் ராமரை விட்டுவிட்டார்கள். இங்கு கடவுளையும் கட்சிகளுக்கான அரசியலாக பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Palanisamy T
ஆக 09, 2024 18:05

தைப்பூசத்திற்கு பொது விடுமுறை விடவில்லையா? EPS .வந்தப் பிறகுதான் வந்தப் பிறகுதான் கிடைத்ததா தைபூசமென்றாலே முருகக் கடவுளின் வழிப்பாடுதான். மிகப் பழமையான தொன்மை வழிப்பாடு. நேற்றுவந்த மதங்களுக்கெல்லாம் மரியாதை. மக்களை சொல்லவேண்டும். அவர்கள் இவர்களுக்கு இவ்வளவு இடங்கள் கொடுத்திருக்கக் கூடாது. EPS. அவர்களுக்கு உலக தமிழ்நெஞ்சங்கள் சார்பாக எனது நன்றி.


அஞ்சலை
ஆக 09, 2024 11:09

ஸ்ரீரங்கம் கோவில் அடிமனை பிரச்சனை வழக்கில் வாதியே ஸ்ரீரெங்கநாதர்தான். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடக்குது.


sridhar
ஆக 09, 2024 10:43

இவர் மட்டுமென்ன, பத்து வருடம் முன்பு ஹிந்து மதத்தை ஆபாசமாக பேசியவர் , இன்று விபூதி இல்லாமல் வெளியே வருவதில்லை .


Kanagaraj M
ஆக 09, 2024 13:24

எல்லாரும் ஒரு விசயத்தை உணர்வதற்கு நாட்கள் பிடிக்கிறது. நானும் நாத்திகனாக இருந்தேன், இன்று மாறிவிட்டேன் புரிதலுக்கு பிறகு.


Saravanan D
ஆக 09, 2024 10:32

சீமான் நீங்கள் ஆரம்ப கால அரசியல் பிரச்சார மேடைகளில் சிவனை மிகவும் கேவலமாக பேசியது எல்லாம் நினைவில் உள்ளது அந்த பேச்சுக்கள் எடுபடவில்லை என்று இன்று சிவனை முப்பாட்டன் என்று கூறுகிறீர்கள் கிருஷ்ணரை என்னவெல்லாம் பேசினீர்கள் இன்று மாயோன் என்கிறீர்கள் ஓட்டுக்காக நீங்களே மாற்றி மாற்றி பேசி விட்டு இன்று மற்ற கட்சிகளை குற்றம் குறை கூறுவது நியாயமா?


அரவழகன்
ஆக 09, 2024 10:24

தி.மு.க. பா.ஜ.க.வுக்கு பக்தி வருவது ஓட்டுக்காக.. நீ திருநீறு பூசுவது யாருக்காக..


Sampath Kumar
ஆக 09, 2024 10:03

கரெக்ட் சீமான் சொல்வது மதவியாதி அரசியல் பண்ணும் பயல்களை பற்றி தான் இப்போ அது விரிவடைந்து தனுக்கு தேவை வரும் பொது தக்க கடவுள்களை தகவு அமைத்து கொண்டாட வேண்டியது காரியம் முடிந்ததும் கழட்டி விட வேண்டியது இது அரசியலிதை மக்கள் பார்த்து கொண்டு பேசாமல் இருக்கிறார்கள் எவர் என்ன செய்ய ஒருகும்பல் ராமர் கோசம் போட்டு ஆட்சியை பிடித்தது அதன் பின்பு ராமர் சத்தத்தை காணோம் ஏன் /என்ன ஆச்சு / ராமர் காலை வாரி விட்டாரு அதுதான் காரணம் அதை பற்றி எல்லாம் பேசமாட்டார்கள் இந்த காவாலி பயலுக உடனே வேற கடவுளுக்கு போய்ட்டானுக


Duruvesan
ஆக 09, 2024 11:08

அதுக்காக அவனுங்க உங்க மடரசா கடவுளை வாழ்கன்னு சொன்னாலும் சொல்லுவானுங்க, அப்பயும் இதே மாதிரி ஊளை இடு


Velan Iyengaar
ஆக 09, 2024 09:59

புழுகு மூட்டை... அரசியல் அநாகரீகம் .....வெத்துவேட்டு .....B டீம் .... காசுக்கு B டீம் வேலை பார்க்கும் கூலிக்காரன் ....


Duruvesan
ஆக 09, 2024 11:09

சூப்பர், தீயமுக மதராச கடவுளை கைவிட்டது தப்பு,, அவங்க இது உங்க கடவுளின் ஆட்சின்னு தான் சொல்லணும்,


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 11:49

இவன் டீம்காவின் பி டீம் ன்னு உலகத்துக்கே தெரியும் ......


Mithun
ஆக 09, 2024 09:52

அல்லேலுயா அல்லேலுயா


Svs Yaadum oore
ஆக 09, 2024 09:34

கடவுளையும் கட்சிகளுக்கான அரசியலாக பார்க்கின்றனராம் .....அப்ப விடியல் மந்திரி ஜெபம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி என்று சொல்லும் போது மட்டும் இனித்ததே ..அது எப்படி ??..


Barakat Ali
ஆக 09, 2024 09:33

உண்மை ......... மதச்சார்பின்மை என்கிற பெயரில் ஹிந்துக்களை ஒடுக்கி வைத்து, அவர்களின் உரிமைகளை பிறருக்கு தாரை வார்த்த அடாத செயலால் நாட்டில் இன்று மதநல்லிணக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது ....


மேலும் செய்திகள்









புதிய வீடியோ