உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பவுன் ரூ.59,000 தாண்டியது தங்கம் விலை; காணும் பொங்கலில் ஆபரண பிரியர்களுக்கு ஷாக்

பவுன் ரூ.59,000 தாண்டியது தங்கம் விலை; காணும் பொங்கலில் ஆபரண பிரியர்களுக்கு ஷாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று ரூ.59 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது.இந்நிலையில், இன்று (ஜன.,16) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ. 59,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.7,390க்கு விற்பனை ஆகிறது.கடைசி 5 நாட்கள் தங்கம் விலை நிலவரம்;11/01/2025- ரூ.58,52013/01/2025- ரூ. 58,72014/01/2025 - ரூ. 58,64015/01/2025 - ரூ.58,72016/01/2025 - ரூ.59,120தை மாதத்தில் சுப முகூர்த்த நிகழ்வுகள் அதிகமாக நடக்கும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajan A
ஜன 16, 2025 18:23

அதுதான் ₹1000 மாதம் கொடுக்கிறார்களே. அதை வைத்து தங்கம் வாங்கி தமிழக பெண்கள் ஆனந்தமாக இருக்கிறார்களே.


Vel1954 Palani
ஜன 16, 2025 14:12

கல்யாணத்துக்கு இனிமேல் தங்கம் இல்லாமல் மாற்று வழியை மக்கள் யோசிக்கவும். இருக்கவன் வாங்குகிறான். இல்லாதவன் என்ன செய்வான் . முடிவு அரசு கையில்.


இளந்திரையன் வேலந்தாவளம்
ஜன 16, 2025 11:33

தங்கம் விலை ஏறினால் தங்கம் பிரியர்களுக்கு ஷாக் விலை இறங்கினால் இருப்பு வைத்தவர்களுக்கு ஷாக்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை