தங்கம் விலை ரூ.400 குறைவு
சென்னை; தமிழகத்தில் நேற்று, தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14 ஆயிரத்து 185 ரூபாய்க்கும், சவரன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 400 ரூபாய் சரிவடைந்து, 1 லட்சத்து 13 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.