உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 சரிவு; ஒரு சவரன் ரூ.72,120!

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 சரிவு; ஒரு சவரன் ரூ.72,120!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 23) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து, ஒரு சவரன் ரூ. 72,120க்கு விற்பனை ஆகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம், ஏப்ரல் 21ம் தேதி ஆபரண தங்கம் கிராம், 9,015 ரூபாய்க்கும், சவரன், 72,120 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 22) ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 275 ரூபாய் உயர்ந்து, 9,290 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில் இன்று (ஏப்ரல் 23) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து, ஒரு சவரன் ரூ. 72,120க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.275 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ponssasi
ஏப் 23, 2025 11:34

இந்திய பெண்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகம் தான் இந்த விலையேற்றம். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் விலையேற்றம் என சாமானிய மக்களை ஏமாற்றி அமோகமாக நடக்கிறது. இந்த விலைஏற்றத்தால் குற்றச் செயல்கள் அதிகமாக நடக்கிறது. குறிப்பாக வடமாநிலத்தவர் விமானம்மூலம் வந்து நகை பறித்து செல்வதை காணமுடிகிறது. அரை பவுன், ஒரு பவுன் நகைக்காக கொடூரமான கொலைகள் நடக்கிறது. உழைக்க தேவை இல்லை இரண்டு பவுன் நகை கிடைத்தால் போதும் சுமார் ஆறுமாதம் உட்காந்து சாப்பிடலாம்.


முக்கிய வீடியோ