தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில் இன்று (செப் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ. 84,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 22) ஆபரண தங்கம், கிராம், 10,430 ரூபாய்க்கும், சவரன், 83,440 ரூபாய்க்கும் விற்பனையானது.நேற்று (செப் 23) காலை தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 10,500 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 84,000 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 140 ரூபாய் அதிகரித்து, 10,640 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,120 ரூபாய் உயர்ந்து, 85,000 ரூபாயை தாண்டி, 85,120 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.இந்நிலையில் இன்று (செப் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துஒரு சவரன் ரூ. 84,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.10,600க்கு விற்பனை ஆகிறது. சில நாட்களிலேயே, தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவில் உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று விலை குறைந்துள்ளது.