தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு: ஒரு சவரன் ரூ.90,160க்கு விற்பனை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில் இன்று (நவ.,07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.90,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,270க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த நவ.,03ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆனது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0w8eo5c3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நவ., 04ம் தேதி ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று முன்தினம் (நவ.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.11,180க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.163க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று (நவ.,06) காலை தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 11,250 ரூபாய்க்கும், சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 90,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 164 ரூபாயாக இருந்தது. நேற்று மாலை மீண் டும் தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 11,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 90,560 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 165 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (நவ.,07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.90,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,270க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.