தங்கம் விலை ரூ.800 குறைவு: ஒரு பவுன் ரூ.92,800க்கு விற்பனை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கடந்த இரு தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தங்கம் விலை நேற்று முன்தினம் (நவ.,10) 1,440 ரூபாயும், நேற்று (நவ.,11) 1,760 ரூபாயும் அதிகரித்தது. இதன் மூலம், கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.3200 உயர்ந்தது. இதனால், தங்கம் விலை பவுனுக்கு ரூ.93,600க்கு விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், இன்று (நவ., 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.100 சரிந்து, ஒரு கிராம் ரூ.11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.92,800க்கு விற்பனை ஆகிறது. அதேவேளையில், வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.173க்கு விற்பனை ஆகிறது.