உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று காலை ரூ. 120 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.720 அதிகரித்து ரூ.70,840 ஆக விற்பனை ஆனது.ஆபரண தங்கத்தின் விலை, சர்வதேச நிலவரங்களினால், ஏற்ற இறக்கங்களுடன் விலை மாறி வருகிறது. நேற்று( மே 13) தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று காலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.70, 120 ஆகவும், ஒரு கிராம் ரூ.8,765 ஆகவும் விற்பனை ஆனது.இந்நிலையில், மாலை தங்கத்தின் விலை இரண்டாவது முறையாக சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.70, 840 ஆகவும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8,895 ஆகவும் விற்பனை ஆகிறது. நேற்று இரண்டு முறை குறைந்த நிலையில், இன்று இரண்டு முறை நகை விலை உயர்ந்தது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Baskaran
மே 13, 2025 17:22

தங்கம் விலை 1கிராமுக்கு 6000 ரூபாய் படிப்படியாக குறையும் இந்த ஆண்டில் ....


Nada Rajan
மே 13, 2025 15:32

தங்கம் விலை குறைய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை