வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தங்கம் விலை குறைய வேண்டும்
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,020க்கு விற்பனை ஆகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 09) ஆபரண தங்கம் கிராம், 8,955 ரூபாய்க்கும், சவரன், 71,640 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஜூன் 10) தங்கம் விலை கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 8,945 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 80 ரூபாய் சரிவடைந்து, 71,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், இன்று (ஜூன் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,020க்கு விற்பனை ஆகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை குறைய வேண்டும்