உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று சவரனுக்கு ரூ.720 சரிந்த தங்கம்; 2 நாட்களில் ரூ.2,000 விலை குறைவால் பெண்கள் மகிழ்ச்சி

இன்று சவரனுக்கு ரூ.720 சரிந்த தங்கம்; 2 நாட்களில் ரூ.2,000 விலை குறைவால் பெண்கள் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 05) ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது.கடந்த சில நாட்கள் முன்னதாக ஆபரணத் தங்கத்தின் விலையில் யாரும் எதிர்பார்க்காத மாற்றங்கள் நிலவின. தங்கம் விலை ஏற்றம் கண்டதால் பெண்கள் கவலையில் ஆழ்ந்தனர். இந் நிலையில் 2வது நாளாக இன்றும் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. ஒரு கிராம் 90 ரூபாய் குறைந்து ரூ.8310க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.66,480க்கு விற்கப்படுகிறது.கடந்த 2 நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலையில் ரூ.2000 வரை சரிவு காணப்பட்டுள்ளது. விலை சரிவை அறிந்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஏப் 05, 2025 19:50

இதில் எங்க மத்திய அரசு வந்தது? தங்கம் உலக மார்க்கெட்டு என்பது இது கூட தெரியாத சில பேரு கருத்து சொல்ல வந்து விட்டார்கள்


venugopal s
ஏப் 05, 2025 13:13

தங்கம் விலை ஏறியது ஒரு கிராம் இரண்டாயிரம் ரூபாய், இறங்கியது ஒரு கிராம் இருநூற்றைம்பது ரூபாய், இதில் மகிழ்ச்சி அடைய என்ன உள்ளது?


Sri Ra
ஏப் 05, 2025 12:04

என்ன இலவசமாவா கொடுக்குறாங்க சந்தோச பட.


karthikeyan.P
ஏப் 05, 2025 10:34

தங்கத்தின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு தவறிவிட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை