உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 சரிவு; ஒரு சவரன் ரூ.63,120!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 சரிவு; ஒரு சவரன் ரூ.63,120!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (பிப்.,15) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது. ஒரு கிராம் ரூ.7,890க்கும், ஒரு சவரன் ரூ.63,120க்கும் விற்பனையாகிறது.கடந்த சில நாட்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் விலையில் சற்று ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,990க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,920க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று (பிப்.,15) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது. ஒரு கிராம் ரூ.7,890க்கும், ஒரு சவரன் ரூ.63,120க்கும் விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை