உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலையில் மகிழ்ச்சி; மதியம் அதிர்ச்சி: உச்சத்துக்கு போனது தங்கம் விலை!

காலையில் மகிழ்ச்சி; மதியம் அதிர்ச்சி: உச்சத்துக்கு போனது தங்கம் விலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இன்று காலை 280 ரூபாய் குறைந்த தங்கம் விலை, மதியம் பவுனுக்கு 720 ரூபாய் அதிகரித்தது. ஒரு பவுன் 80 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சர்வதேச நிலவரங்களால், கடந்த மாத இறுதியில் இருந்து, நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையாகியது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.1,600 அதிகரித்திருந்தது. இந்த நிலையில், தங்கம் விலை காலை இன்று கொஞ்சம் குறைந்தது. சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனையானது. ஆனால், மதியம் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கம் பவுனுக்கு 720 ரூபாய் அதிகரித்தது. பவுன் 80 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையானது; கிராம் 10 ஆயிரத்து 60 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது, நகை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramaraj P
செப் 08, 2025 16:56

500 ரூபாய்க்கு கூட தங்கம் வாங்க முடியும்.இல்லைஎனில் வெள்ளி வாங்குங்கள்.வங்கியில் டெபாசிட் பன்னுவது வீண்.


ஜெ குருநாதன் மதுரை
செப் 08, 2025 16:07

இப்படியே போனால் தங்கம் வாங்குவதை மறந்து விட வேண்டியது தான்


இளந்திரயன், வேலந்தாவளம்
செப் 08, 2025 15:58

நகை வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி, கையிருப்பு வைத்திருக்கும் மக்களுக்கோ மகிழ்ச்சி