உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: ஒரு சவரன் ரூ.76,960

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: ஒரு சவரன் ரூ.76,960

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 30) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.76,960க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் சில தினங்களாக, தங்கம் விலையில், ஏற்ற இறக்கம் உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 28), 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,405 ரூபாய்க்கும், சவரன், 75,240 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஆகஸ்ட் 29) காலை தங்கம் விலை கிராமுக்கு, 65 ரூபாய் உயர்ந்து, 9,470 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 520 ரூபாய் அதிகரித்து, 75,760 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. திடீரென நேற்று மதியம் மீண்டும், தங்கம் விலை கிராமுக்கு, 65 ரூபாய் உயர்ந்து, 9,535 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 520 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 76,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 30) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.76,960க்கு விற்பனை ஆகிறது.கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,620க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஆக 30, 2025 13:44

டாலர் மதிப்பு ஏறுவது ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தி. நம்மால் இயன்றவரை இறக்குமதி பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.


Tamilan
ஆக 30, 2025 12:22

இந்திய பொருளாதாரம் ஏறியதை விட அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு ஏறிவிட்டது . பொருளாதாரம் என்ற பெயரில் மக்களுக்கு எலும்புத்துண்டு போட்டு கொள்ளையடிக்கும் ஏமாற்றும் கும்பல்


அப்பாவி
ஆக 30, 2025 09:58

டாலருக்கு எதிரான ரூவாயின் மதிப்பு உயர்ந்தால் தங்க புது உச்சம் தொடும்.


சமீபத்திய செய்தி