வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தங்கம் விலை குறைய வேண்டும்
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.,09) சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.58,080க்கும், ஒரு கிராம் ரூ.7,260க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. ஜனவரி 1ம் தேதி, ஆண்டின் முதல் நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. நேற்று (ஜன.,08) சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,225க்கும், ஒரு சவரன் ரூ.57,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜன.,09) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.58,080க்கும், ஒரு கிராம் ரூ.7,260க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை 58 ஆயிரம் ரூபாயை தொட்டது நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் (ஜன.2 முதல் ஜன.9 வரை) தங்கம் விலை நிலவரம்;02/01/2025 - ரூ.57,44003/01/2025 - ரூ.58,72004/01/2025 - ரூ. 57,72005/01/2025 - ரூ. 57,72006/01/2025 - ரூ. 57,72007/01/2025 - ரூ. 57,72008/01/2025- ரூ. 57,80009/01/2025- ரூ.58,080
தங்கம் விலை குறைய வேண்டும்