உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை

தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (நவ., 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,310க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 30) காலை தங்கம் விலை கிராமுக்கு, 225 ரூபாய் குறைந்து, 11,100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,800 ரூபாய் சரிவடைந்து, 88,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 165 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் மாலை தங்கம் விலை கிராமுக்கு, 200 ரூபாய் உயர்ந்து, 11,300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.சவரனுக்கு, 1,600 ரூபாய் அதிகரித்து, 90,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று (அக் 31) தங்கம் விலையில் மாற்றமில்லை.இந்நிலையில் இன்று (நவ.1) மாதத்தின் முதல் நாளான தங்கம் உயர்வுடன் தனது வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,310க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.166க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையில் நேற்று மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Jeyakumar Chelladurai
நவ 01, 2025 22:00

தங்கம் வாங்குவதை சற்று காலம் எல்லோரும் தள்ளி வைத்தாலே தன்னாலே குறையும். கூடுவது ரூபாய் 100, குறைவது 20 ரூபாய். இந்த விலை குறைப்பை ஊடகங்கள் வெளியிடும் விதம் மக்களை தூண்டும் வகையில் அமைகிறது. அனைவரும் சற்று சிந்தித்தால் தங்க விலையை குறைக்க முடியும்.


soundher
நவ 01, 2025 12:02

தங்கம் விலை குறைய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை