உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை இன்றும் உயர்வு; 7 நாட்களில் மட்டும் ரூ.2,200 அதிகரிப்பு

தங்கம் விலை இன்றும் உயர்வு; 7 நாட்களில் மட்டும் ரூ.2,200 அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் ரூ.280 அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, நாள்தோறும் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் காணப்பட்டன. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வரும் தங்கம் விலை, புதிய உச்சமாக ரூ.63 ஆயிரத்தை கடந்து விற்பனையாகியது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிரடியாக அதிகரித்து உள்ளது. ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ. 7,980 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.280 அதிகரித்து ரூ.63,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், கடந்த 7 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.2,200 அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்துக்கு சென்றுள்ளதால் நகை வாங்கும் பெண்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.கடந்த 7 நாட்களில் (பிப்.,4 முதல் பிப்.10 வரை) நிலவிய தங்கம் விலை நிலவரம்;பிப்.,10 - ரூ.63,840பிப்.,09 - ரூ.63,560 (விலையில் மாற்றமில்லை)பிப்.,08 - ரூ.63,560பிப்.,07 - ரூ.63,440 (விலையில் மாற்றமில்லை)பிப்.,06 - ரூ.63,440 பிப்.,05 - ரூ.63,240 பிப்.,04 - ரூ.62,480


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ