உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளுக்கப்போகுது வடகிழக்கு பருவமழை; சென்னை மக்களே, உஷார்!

வெளுக்கப்போகுது வடகிழக்கு பருவமழை; சென்னை மக்களே, உஷார்!

சென்னை: '' தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 112 சதவீதம் கூடுதலாக பெய்யும்,'' என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே 30ல் துவங்கியது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட நிகழ்வுகள் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் மழை கொட்டி தீர்த்தது. தற்போது பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை விலகத் துவங்கியுள்ளது.ஒவ்வொரு பகுதியிலும் பருவமழை விலகலுக்கான தேதிகளை, இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது. அதன்படி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், இறுதி கட்டமாக வரும் 15ல் தென்மேற்கு பருவக்காற்று விலகும் என்று கூறப்படுகிறது. இந்த கணக்கீட்டின்படி, தமிழகத்தில் அக்., 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும். தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா, ராயல்சீமா பகுதிகளில் இயல்பை விட அதிகமாக 112 சதவீதம் கூடுதலாக பெய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அக்., 3வது வாரம்

இந்திய வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை அக்., 3வது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளது. இது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஆனால், வட மாவட்டங்களில் அதிகமாகவும், தென் மாவட்டங்களில் குறைவாகவும் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. தென் மேற்கு பருவமழை 18 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாகவும், டெல்டா மாவட்டங்களில் குறைவாகவும் பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Lion Drsekar
அக் 02, 2024 13:44

எப்பேர்ப்பட்ட பேய் மழை பொழிந்தாலும் நாங்கள் ஒரு சொட்டுகூட சேமிக்கமாட்டோம், கடல் எதற்க்காக இருக்கிறது , மெத்த படித்தவர்கள் மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு வாய்திறக்காமல் இருப்பது , அதே நேரத்தில் நீதிமன்றமாவது தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்து மழை நீரை சேமிக்கவேண்டும் என்றும் அதே நேரத்தில் எங்கெல்லாம் இரு குளங்கள் இருந்து அவைகளில் அரசாங்கமே கட்டிய கட்டிடங்களை இடித்துத்தள்ளி அதில் மீண்டும் இரு குளங்களை ஏற்படுத்தும் காலம் வந்தால் மட்டுமே ... எதுவும் நடக்கப்போவது இல்லை,


Ravi Kulasekaran
அக் 02, 2024 08:23

சென்னையில் மேயர் பிரியா மழைநீர் கால்வாய்களை நன்றாக தினசரி தூர்வாரி ஜாதி மத வேறுபாடின்றி அப்பா மகன் மருமகன் வயதானவர்கள் என்று வேறு பாடின்றி எவ்வளவு மழைநீரையும் உள்வாங்கி வெளியேற்ற கூடிய பஞ்சர் ஆகாது செயல் திறன் மிக்க மேயர் இருக்க சென்னை மக்கள் பயம் ஏன்


Mani . V
அக் 02, 2024 05:51

ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அதுதான் இளவரசருக்கு பட்டாபிஷேகம் நடந்து விட்டதே.


Anantharaman Srinivasan
அக் 01, 2024 23:35

மழை வெள்ளம் வந்த பின் உதயநிதி கம்பூட் சகிதமா உலா வருவார். முன்னாடி எதுவும் செய்ய மாட்டார்.


narayanansagmailcom
அக் 01, 2024 21:57

ஒவ்வொரு வருடமும் இது தொடர் கதையாக நடக்கிறது. திராவிட மாடல் அரசு எதற்கும் லாயக்கு இல்லாத அரசு என்பது இந்த வருடமும் நிரூபணம் ஆகும்.


ديفيد رافائيل
அக் 01, 2024 19:43

இந்த மாதிரி நியூஸ் போட்டா ரெயின் வராது


சாண்டில்யன்
அக் 01, 2024 19:28

இப்போது பாலச்சந்திரன் டிவி பேட்டிக்கு தடை விதித்துள்ளார்களோ? போகட்டும் அவருக்கு மாற்றாக EWS யாரும் இல்லையோ? என்ன காரணம் இப்படி?


Gurumoorthy Padmanaban
அக் 01, 2024 18:38

சென்னை மடிப்பாக்கம் மக்களே உஷார் உஷார் உஷார். எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமான பள்ளங்கள் பல்லிளிக்கும் சாலைகள். தினம் தினம் பல பேர் விழுந்து எழுந்திருக்கும் நிலை. அரை குறையாக மூடப்பட்ட பள்ளங்கள் சாக்கடை நீர் வழியும் சாலைகள் இவை அனைத்திற்கும் காரணம் சரியாக முடிக்கப்படாத பாதாள சாக்கடை , மழைநீர் வடிகால், மெட்ரோ வாட்டர் பணிகள் . யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை.என்று விடியும் எங்களுக்கு என கேட்கும் பொதுஜனம்.


சாண்டில்யன்
அக் 01, 2024 19:32

இந்த நிலை திடீரென்று ஆட்சி மாறியதால் ஏற்பட்டு விட்டதோ? போன தேர்தல் அறிவிக்கும் நேரத்தில் அவசர கதியில் பல நூறு டெண்டர்கள் விட்டாரே நமது "பொது செயலாளர்" அதெல்லாம் என்னானது


D.Ambujavalli
அக் 01, 2024 18:37

மக்கள் மட்டும்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அரசு,, மாநகராட்சியெல்லாம் ‘இந்த ஆண்டு நூற்றாண்டு காணாத மழை’ என்று எதோ அவர்கள்தான் நூற்றாண்டு சாதனை செய்த மாதிரி அறிக்கை விட்டுவிட்டு போய்விடலாம்


Gurumoorthy Padmanaban
அக் 01, 2024 18:27

சென்னை மடிப்பாக்கம் மக்களே உஷார் உஷார் உஷார். இப்பவே மழை நீர் வடிகால் பணிகளில் தொய்வு, பாதாள சாக்கடை பணிகளில் தொய்வு மெட்ரோ வாட்டர் பணிகளில் தொய்வு. இந்த காரணங்களால் நன்றாக இருந்த சாலைகள் மோசமான சாலைகளாகி தினமும் பல பேர் விழுந்து எழுந்திருக்கும் நிலையில் மழையும் பெய்தால் அனைவரும் அம்போ தான்.


புதிய வீடியோ