உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசுத் துறைகள் செயலிழப்பு: திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

அரசுத் துறைகள் செயலிழப்பு: திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் போலப், பயன்படுத்தி அரசுத்துறைகள் அனைத்தையும் செயலிழக்க வைத்துவிட்டார்கள்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில், பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக, என்சிஆர்பி எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும், 201 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது, நாட்டிலேயே மிக அதிகம். மேலும், வயது முதியவர்களுக்கு எதிராக 2,104 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, நாட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m9kvyqtl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தவிர, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, கடந்த 2020 ஆம் ஆண்டு, பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை 1,294. தற்போது வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 1,921 குற்றங்கள் பதிவாகியுள்ளன. பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் சுமார் 50% அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இவை அனைத்தும் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை மட்டுமே.தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலைமை இத்தனை மோசமாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கவும், திமுக ஆட்சி மீது விமர்சனம் வைப்பவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும் மட்டுமே, காவல்துறையைப் பயன்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை, திமுக நிர்வாகிகள் போலப் பயன்படுத்தி, அரசுத் துறைகள் அனைத்தையுமே செயலிழக்கச் செய்து விட்டார்கள். இதன் விளைவுதான், சீரழிந்து போன சட்டம் ஒழுங்கும், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்களும். ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை. ஆடிக் கொள்ளுங்கள் இன்னும் ஆறு மாத காலம். உங்கள் அராஜகத்திற்குத் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Barakat Ali
அக் 02, 2025 05:58

[ஆடிக் கொள்ளுங்கள் இன்னும் ஆறு மாத காலம். உங்கள் அராஜகத்திற்குத் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.] ......... மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் ...


மணிமுருகன்
அக் 02, 2025 00:03

அருமை


Raja
அக் 01, 2025 22:21

இவரு நெனைச்சா திமுக அரசு நல்லா இருக்குதுன்னு சொல்லுவாரு அப்புறம் சரியில்லைன்னு சொல்லுவாரு ..எதிலேயும் ஸ்திரம் கிடையாது இவருடைய பேச்சுல ...


Raj S
அக் 02, 2025 01:10

நல்லாருக்குனு சொன்னா ஒதுக்குவோம், நல்லாளனு சொன்னா கண்டமேனிக்கு குறைப்போம் அதுதான் மாடல்... என்ன நான் சொல்றது?


Sudha
அக் 01, 2025 21:28

அய்யா 2026ல் இதே அரசு யந்திரத்தை வைத்து தான் ஆட்சி நடத்த முயற்சிக்கிறீர்கள், 60 வருட காங்கிரஸ் க்கும் 12 வருட பிஜேபி க்கும் வித்தியாசமில்லாமல் ஒவ்வொரு துறையும் உளளது, பாதுகாப்பு வெளிவிவகார, உள்துறை, விமான, பொருளாதார துறைகள், வங்கி மோசடி, தேர்வு ஊழல்கள், பாலியல் குற்றச்சாட்டுகள், அரசியல் விருப்பு வெறுப்பு கொண்ட மாநில பாரபட்சம் ஜாதீய மத டவெஷன்கள் எங்கும் நிறைந்துள்ளன. பல்வேறு காங்கிரஸ் போல பிஜேபி யும் ஒன்று எனும் நிலையில் இருந்து மீளுங்கள். இரண்டு கேள்விகள்- உங்களை ஒதுக்கியதற்கு என்ன காரணம்? நாயனாரின் 4 கோடி வழக்கு கொடநாடு வழக்குகள் என்ன ஆயின?


சிட்டுக்குருவி
அக் 01, 2025 20:16

அரசியலமைப்பு படி அரசு ,நீதித்துறை ,பாதுகாப்பு காவல்துறை இம்மூன்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்கள்போன்றது .மூன்றுமே தனித்துவமாக செயல்படும்போதுதான் ஜனநாயகத்தின் முழு பலனும் மக்களைசென்றடையும் .மூன்றுமே ஒருவருக்கொருவர் தவறிழைக்காமல் இருப்பதாய் உறுதி செய்யவேண்டும் .ஆனால் காவல்துறை நிர்வாககாரணங்களுக்காக அரசை சார்ந்திருக்கும் நிலைமையில் உள்ளதால் அவர்களுக்கு பணிந்து செல்லவேண்டியுள்ளது .இது பெரும்பாலும் காவல்துறையின் தலைமையை பொருத்ததே .தலைமை சுயமரியாதையோடு சட்டப்படியே செயல்பட முடியாத நிலைமையில் உள்ளது .அதனால் காவல்துரையும் ,நீதித்துரைப்போன்றே தனித்துவமாக செயல்படும் நிர்வாக மாற்றம் ஏற்பட்டால் ஒழிய இதுபோன்ற நிலைமையை மாற்றமுடியாது .நாம் எப்போதும் இதுபோன்ரே கூவிக்கொண்டேதான் இருக்கவேண்டும் .கருணாநிதி முதல்வராக இருக்கும்போது ஒருமுறை காவல்துறையை தனித்துவமாக செயல்பட போலீஸ் கமிஷன் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த முயற்சிகள் செய்தார் .ஆனால் எனோ அது நடக்கவில்லை .சட்டசபை எல்லாக்கட்சி உறுப்பினர்கள் கொண்ட காவல் துறை கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கலாம் .காவல்துறை நேர்மையாக செயல்படுவதை கண்காணிக்கலாம் .தவறிழைக்கும் அதிகாரிகள் இந்த கண்காணிப்பு குழுவிற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்டவர்களாவார்கள் .சட்டத்தைமீறும் அதிகாரிகள்மீது சட்டநடவடிக்கைக்கு பரிந்துரைக்கலாம் .ஆனால் அரசு ஏற்காது .அவர்களுக்கு காவல்துறை ஏவல்துறையாக இருப்பதுதான் அவர்கள் செய்யும் சட்டமீறல்களுக்கு பாதுகாப்பு .


T.sthivinayagam
அக் 01, 2025 20:05

வாய் உள்ளவர்கள் பேசும் நிலையில் தான் தமிழக பாஜக உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.


vivek
அக் 02, 2025 09:35

உன்னை போல இருநூறு வாங்கி ஜால்ரா போடும் கூட்டமும் இருக்குதே


Ambedkumar
அக் 01, 2025 19:25

சார், அரசாங்கத்தை நடத்துவதே ஒரு சில அதிகாரிகள்தான் என்று சமீபத்தில் ஒரு உயர் நீதிமன்ற நீதியரசர் கூறியதும், அதற்கு சில அமைச்சர்கள் மறுப்புத் தெரிவித்ததும் ஞாபகம் வருகிறது.


joe
அக் 01, 2025 19:20

கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் இறந்து விட்டார்கள் என்று ஒரு நபர் கமிஷன் மற்றும் 8பேர் கொண்ட எம் பி க்கள் குழு என்று ஓடோடி வருகிறார்கள் ஆனால் வயது முதிர்ந்த 60 வயதை கடந்த பலர் தினம் தினம் இறக்கிறார்கள் .இது சம்பந்தமாக எந்த அரசியல் வாதியும் யாரும் கவலைப்பட்டதாக தெரிவில்லை .வயது வந்த முதியவர்களுக்கு நாட்டில் பாத்து காப்பில்லை .அவர்களின் வாழ்வாதாரமான சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருக்கிறார்கள் .வயதாவனர்களுக்கு தேசத்தில் பாதுகாப்பில்லை .மாநிலத்திலும் பாதுகாப்பில்லை இருக்கும் இடத்திலும் பாதுகாப்பில்லை இது பற்றி எந்த அரசியல் வதியும் கவலைப்படுவதில்லை .


கூத்தாடி வாக்கியம்
அக் 01, 2025 18:59

செய்யுது தலை வா வருமானம் உள்ள பேப்பர் மட்டும் நகருது


சேகர்
அக் 01, 2025 18:30

2020 இல் கொரோனா காலம் .. எப்படி ஒப்பீடு செய்ய முடியும் ?