உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏழைகள் இருக்க வேண்டுமென திட்டமிட்டு ஆட்சி நடக்கிறது: அண்ணாமலை காட்டம்

ஏழைகள் இருக்க வேண்டுமென திட்டமிட்டு ஆட்சி நடக்கிறது: அண்ணாமலை காட்டம்

திருக்கோவிலுார்: ''தமிழகத்தில் ஏழைகள் இருக்க வேண்டும் என திட்டமிட்டு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' யாத்திரையின் 165வது சட்டசபை தொகுதியாக, நேற்று முன்தினம் திருக்கோவிலுார் தொகுதியில் யாத்திரை மேற்கொண்டார்.திருக்கோவிலுாரில் முக்கிய வீதிகள் வழியாக சென்ற அவர், பஸ் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:ஒரு காலத்தில்,தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பதை, நடுநாட்டின் தலைநகர் திருக்கோவிலுார் முடிவு செய்யும். அப்படிப்பட்ட சரித்திர புகழ்பெற்ற ஊர் இது.வைணவமாக இருந்தாலும், சைவமாக இருந்தாலும் போட்டி போட்டு, நம் சனாதன தர்மத்தை வளர்ப்பதில் திருக்கோவிலுார் முதல் இடத்தில் உள்ளது.இவ்வளவு புகழ்மிக்க ஊரில் நல்ல ஆட்சியாளர்கள் இல்லையே என்றஏக்கம் உள்ளது. தொகுதியின் முன்னாள் அமைச்சர் பொன்முடி, மிக முக்கியமான புள்ளி. அப்பா அமைச்சர், மகன் எம்.பி., இவர்கள், குறுநில மன்னரைப் போல ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர். பொன்முடி மீது மூன்று வழக்குகள் உள்ளன.அடிப்படையில் இவர்களுக்கு மக்கள் மீது அன்பு இல்லை, பாசம் இல்லை. இதனால் தான் ஆண்டவனாக பார்த்து தண்டனை கொடுத்திருக்கிறான். இவர்களால் ஊருக்கு வளர்ச்சி வராது. வளர்ந்துவிட்டால், மக்கள்,அரசியல்வாதிகளை மதிக்க மாட்டார்கள் என்பதுஅவர்களுக்குத் தெரியும்.தமிழகத்தில் ஆண்ட கட்சியும் சரி, ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, ஏழை ஏழையாக இருக்க வேண்டும் என்பதில்உறுதி யாக இருக்கின்றனர்.இந்த சுற்றுப்பயணத்தில் நான் கண்டது என்னவென்றால், தமிழகத்தில் ஏழைகள் இருக்க வேண்டும் என திட்டமிட்டு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை தான். அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காக இவ்வளவு பேர் இங்கு கூடி இருக்கிறீர்கள். அதுவிரைவில் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ