உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடியிருப்பு திட்டங்கள் மறு மேம்பாடு விதிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவு

குடியிருப்பு திட்டங்கள் மறு மேம்பாடு விதிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவு

சென்னை: குடியிருப்பு திட்டங்களை மறு மேம்பாடு செய்வதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. தமிழகத்தில், தனியார் கட்டுமான நிறுவனங்கள் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த, பொது கட்டட விதிகள் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான விதிகள், புதிய கட்டுமான திட்டங்கள் தொடர்பானவையாக உள்ளன. இந்நிலையில், ஏற்கனவே கட்டி பயன்பாட்டு காலம் முடிந்த, குடியிருப்பு திட்டங்களை மறுமேம்பாடு செய்வது, தற்போது அதிகரித்துள்ளது. இவ்வாறு அடுக்குமாடி குடியிருப்புகளை மறு மேம்பாடு செய்யும் போது, அங்குள்ள சங்கம் எடுக்க வேண்டிய முடிவுகள், திட்ட அறிக்கை தயாரிப்பு, வரைபட தயாரிப்பு வழிமுறைகள் போன்றவை, அடுக்குமாடி குடியிருப்பு உரிமைகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. இதன்படி, அடுக்குமாடி குடியிருப்பு உரிமைகள் சட்டத்தில் குறிப்பிட்ட சில பிரிவுகளின் படி, ஆவணங்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கு ஏற்ப, பொது கட்டட விதிகளின் சில பிரிவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசிதழ் அறிவிப்பை, வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ