உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 67 இடங்களில் நெல் சேமிப்பு கிடங்குகள்: கட்டுமான பணி நடப்பதாக அரசு தகவல்

67 இடங்களில் நெல் சேமிப்பு கிடங்குகள்: கட்டுமான பணி நடப்பதாக அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மாநிலம் முழுதும், 62,750 டன் கொள்ளளவு உடைய, 67 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசின் அறிக்கை: 'விவசாயிகள் பாடுபட்டு உழைத்து உற்பத்தி செய்யும் நெல் மணி ஒன்று கூட வீணாகக்கூடாது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி, கொள்முதல் செய்யும் நெல்லை, பாதுகாப்புடன் சேமிக்க, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியை விட, கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஊக்கத்தொகை அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசு நிர்ணயம் செய்த விலையை விட, சன்னரக நெல்லுக்கு குவின்டாலுக்கு 70 ரூபாய், சாதாரண ரக நெல்லுக்கு 50 ரூபாய், ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில், 2016 முதல் 2021 வரை, 1.13 கோடி டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. ஆண்டுக்கு சராசரியாக, 22.7 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. தி.மு.க., அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், 1.70 கோடி டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. ஆண்டுக்கு சராரியாக, 42.6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. நடப்பாண்டு செப்டம்பர், 1ம் தேதி முதல் கடந்த, 24ம் தேதி வரை 1,853 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றின் வாயிலாக, 10.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 8.77 லட்சம் டன் நெல் மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மீதமுள்ள, 1.63 லட்சம் டன், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில், 53,831 டன், தஞ்சாவூரில் 23,125, மயிலாடுதுறையில் 16,793, நாகப்பட்டினத்தில், 21,537 டன் நெல் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. நெல் கொள்முதல் ஈரப்பத அளவை, 17 சதவீதத்தில் இருந்து, 22 சதவீதமாக அதிகரிக்க, மத்திய அரசுக்கு, கடந்த 19ம் தேதி முதல்வர் கடிதம் எழுதினார். நிபுணர் குழு அதைத்தொடர்ந்து, 23ம் தேதி மத்திய அரசு மூன்று நிபுணர் குழுவை நியமித்தது. இக்குழுவினர் தமிழகத்தில் ஆய்வு செய்துள்ளனர். நெல் சேமிப்பிற்கு, 1.25 லட்சம் டன் கொள்ளளவு உடைய, 83 கிடங்குகள் அமைக்கும் பணி, 199 கோடி ரூபாயில் துவங்கியது. இதுவரை, 38,500 டன் கொள்ளளவு உடைய, 16 கிடங்குகள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன. மீதமுள்ள, 67 கிடங்குகளை கட்டும் பணி நடந்து வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியை போல் இல்லாமல், நெல் கொள்முதலிலும், அவற்றை மாவட்டங்களுக்கு அனுப்புவதிலும், தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ராஜ்
அக் 27, 2025 23:01

2200 வது வருடம் கட்டி முடிக்கபடும்


ஸ்ரீ
அக் 27, 2025 20:25

67ம் செவ்வாய் கிரகத்தில் கட்டப்படுகிறது


duruvasar
அக் 27, 2025 12:30

தலைமை வருவாய் துறை செயலரின் விரிவான விளக்கத்தை கேட்டபபின்புதான் கருத்து சொல்லமுடியும்.


திகழ்ஓவியன்
அக் 27, 2025 12:14

இந்த வருடம் அமோக விளைச்சல் , ஈரப்பதம் 22 % இருந்தா வாங்கலாம் என்று ஒன்றிய அரசை கேட்டால் இன்னும் பதில் இல்லை , இந்த வருடம் 9 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி ஆகி இருக்கு , ஸ்டாலின் ஆட்சியில் எல்லாம் சுகமே


ஆரூர் ரங்
அக் 27, 2025 14:54

22 சதவீதம் ஈரம் இருந்தால் சேமித்து வைத்து அரைக்க முடியுமா? உடனடியாக உலர வைக்கும் வசதியும் உருவாக்கப்படவில்லை. உருப்படியான அரிசி கிடைக்குமா? காலத்தே தூர் வாராமல் விட்டதால் வந்த தொடர் வினை. எவ்வளவு விளக்கினாலும் உமக்குப் புரியாது.


Indian
அக் 27, 2025 10:40

மத்திய அரசு, ஒரு உதவியும் விவசாயிகளுக்கு செய்வதில்லை? என்ன செய்ய??


V Venkatachalam, Chennai-87
அக் 27, 2025 09:13

ஒரு மகா பொய்யை கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அறிக்கையின் கடைசி பாராவில் சேர்த்துடுவானுங்க. அது "தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி கொண்டு இருக்கிறது". அதில் சேர்க்காமல் விட்டது, "கேழ்வரகில் நெய் வடிகிறது. மக்களே பாத்திரம் கொண்டு போய் பிடிச்சுகோங்க".


duruvasar
அக் 27, 2025 08:22

தாமதத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததுதான் காரணம்.


Modisha
அக் 27, 2025 08:13

மெல்ல செய்யுங்க, அவசரம் இல்லை. இப்போ வெய்யில் காலம் தானே நடக்குது .


vbs manian
அக் 27, 2025 08:12

கண் கேட்டபின் சூரிய நமஸ்காரம். பழைய ஆட்சியை குறை சொல்லி அல்ப சந்தோசம்.


அருண் பிரகாஷ் மதுரை
அக் 27, 2025 07:26

83 நெல் கொள்முதல் அமைக்கும் பணிகள் தொடங்கி 16 பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 67 இடங்களில் பணிகள் நடந்து வருகிறது. அது முடிய இன்னும் எத்தனை வருடம் ஆகலாம். உங்கள் ஆட்சியில் புதிதாக 16 மட்டுமே தொடங்கப்பட்டு உள்ளது.. அவ்ளோதான்.. ஆனால் உங்கள் டாடி பெயரில் தொடங்கும் திட்டங்கள் வெகு சீக்கிரம் முடிகிறது.. ஆனால் மக்கள் நல திட்டங்கள் மட்டும் ஆமை வேகத்தில் நடைபெறும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை