உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல்வாதி வீட்டில் வேலை செய்பவருக்கு அரசு சம்பளம்: அரசு மருத்துவர் கொந்தளிப்பு

அரசியல்வாதி வீட்டில் வேலை செய்பவருக்கு அரசு சம்பளம்: அரசு மருத்துவர் கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: தென்காசியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிய வேண்டிய பணியாளர், உள்ளூர் அரசியல்வாதி வீட்டில் பணியாற்றி வருகிறார். அவருக்கு அரசு, சம்பளம் அளித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு டாக்டர் வெளியிட்ட ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.டெங்கு காலத்தில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப்பணி தற்போதும் நடந்து வருகிறது. இதற்கான பணியாளர்கள் பஞ்சாயத்து யூனியனால் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான சம்பளத்தை யூனியனே வழங்கி வருகிறது. ஆனால், பணியாளர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். வருகைப்பதிவேடும் சுகாதார நிலையங்களிலேயே உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f9yengt8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சம்பளத்தை பஞ்சாயத்து யூனியன் வழங்குவதால், யூனியன் சேர்மன் வீடு அல்லது அவர் சொல்லும் வீடுகளில் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு சம்பளம் கொடுக்கும் நிலையில், பணியாளர்கள் தனி நபர்களின் வீடுகளில் பணியாற்றி வருவதற்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது.இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணிக்காக நான்கு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அவர்களில் ஈஸ்வரன் என்பவர் மட்டும், அங்குள்ள உள்ளூர் அரசியல்வாதி வீட்டில் பணியாற்றி வருகிறார். கடந்த 18 மாதங்களாக அவர் பணிக்கு வராத நிலையிலும் அவருக்கு அரசு சம்பளம் வழங்கி வருகிறது.இதனால், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர் டாக்டர் முத்துக்குமார் என்பவர் ஈஸ்வரனுக்கு மாற்றாக முத்துமாரியம்மாள் என்பவரை நியமித்தார். இவர் மார்ச் மாதம் முழுதும் பணியாற்றிய நிலையில் அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. மாறாக ஈஸ்வரனுக்கே சம்பளம் அளிக்கப்பட்டு உள்ளதாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர் டாக்டர் முத்துக்குமார் குற்றம்சாட்டி ஆடியோ வெளியிட்டு உள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த ஆடியோ தொடர்பாக தென்காசி மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தனிடம் கேட்ட போது, ' ஆடியோ வந்தது உண்மை தான். இது குறித்து விசாரணை நடக்கிறது. யார் எங்கு பணியாற்றுகின்றனர். சம்பளம் எப்படி வழங்கப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடக்கிறது', எனத் தெரிவித்தார்.தென்காசியில் 9.02 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, 16 புதிய மருத்துவக் கட்டடங்கள் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருந்தது. இது வேறு நாள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. தென்காசியில் நடக்க இருந்த அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Bala
ஏப் 13, 2025 22:21

அதான் திராவிட மாடல் அரசு


M Ramachandran
ஏப் 13, 2025 20:09

அது தாம்பா வீடியோ மூஞ்சி விடியலின் சொல்ல படாத ரகசியம். உதய அண்ட் கம்பெனி இந்நாட்களில் கப்சிப் ஆகி காராபூந்தி சாப்பிட்டு கொண்டிருக்கிறார். மெல்லும்சாதம் சத்தம் கூட வெளியில் வருவதில்லை. காரணம் அண்ணாமலை / ஷாவின் கைங்கர்யம்மைய்யா


Jay
ஏப் 13, 2025 19:18

பாவம் அந்த டாக்டர். இனி அவரை வாழ விட மாட்டார்கள்.


சிட்டுக்குருவி
ஏப் 13, 2025 19:08

பொதுவாகவே தமிழ் நாட்டில் எதிர்ப்பு சக்தி மக்களிடமும் அதிகாரிகளிடமும் குறைந்துவிட்டது. மாணவர்களுக்கு பாடதிட்டங்களில் ஊழலுக்கு எதிரான பதிவுகளை ஏற்படுத்தவேண்டும்.உயர்கல்வியில் ஊழலுக்கு எதிரான ஆய்வுகளை நடத்தி ஆய்வின் முடிவுகளை ஊடகங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுதிட வேண்டும்.மேலைநாடுகளில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு உள்ள அளவுக்கு இந்தியாவில் எங்கும் காணோம். மக்களும் ,மக்களில் கல்வியில் சிறந்தோரும் , "நாய் வலம்போனால் என்ன இடம் போனால் என்ன,நம் மேல் விழுந்து கடிக்காமல் இருந்தால் போதும் "என்ற மன நிலையில் இருக்கின்றார்கள்.இந்த மனநிலை மாறினால் மட்டுமே மாற்றம் வரும்.


Anantharaman Srinivasan
ஏப் 13, 2025 18:41

Retired .. IAS. IPS வீடுகளில் பணியாளர்களை அமர்த்திக்கொள்ள மாதம் ₹10,000. அரசு மக்கள் வரிப்பபணத்தை தண்ட செலவு செய்வதை யார் தட்டி கேட்பது.? பழனிசாமி ஆட்சியில் IAS க்கு Sanction. திமுக ஆட்சியில் IPS க்கு Sanction. மொத்தத்தில் இரண்டு திராவிட கட்சிகளும் கரப்ஷன் பேர்வழிகள்.


Mecca Shivan
ஏப் 13, 2025 17:53

இந்த அரசில் அரசாங்க கட்டுமானத்தின் ஓவ்வொரு செல்லிலும் ஊழல் நிரம்பி வழிந்து ஓடுகிறது என்பதுதான் உண்மை.. ஒருபுறம் மதுரை மீனாக்ஷி அம்மன் சித்திரத்திருவிழாவிற்கு மின்சாரம் தரமுடியாது என்று கூறும் அதிகாரி.. மறுபுறம் கிட்டத்தட்ட இரண்டாயிரம் கோடிக்கும் மேல் மின்சாரக்கட்டணம் செலுத்தாத உள்ளாட்சி துறைகள்.. ஆனால் அதே துறைகள் இப்படி பல்லாயிரம் கோடிகளுக்கு ஊழலும் செய்கிறது . மீனாக்ஷியம்மன் கோயில் செலுத்தவேண்டிய ஒருகோடி ருபாய் மின்சாரக்கட்டணம் செலுத்தக்கூட முடியாத அளவிலா உள்ளது .. கோவில் வருமானத்தை மொத்தமாக திருடியது யார் ?


நிக்கோல்தாம்சன்
ஏப் 13, 2025 17:47

விடியாலோ விடியல்


Ramesh Sargam
ஏப் 13, 2025 17:12

அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் சம்பளமே ஒரு வேஸ்ட். இதில் அவர்கள் வீட்டில் பணிபுரிபவர்களுக்கு அரசு சம்பளமா? திமுக ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் திருட்டுத்தனமோ ...?


l.ramachandran
ஏப் 13, 2025 21:47

தி மு க ஆட்சி என்ன பீ ஜே பி ஆட்சி மட்டும் என்ன சளைத்ததா. சமீபத்தில் MP க்கள் சம்பளமும் ஏற்றப்பட்டதே? இதில் யாரை சொல்லியும் பயன் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை