உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 ஆண்டில் பெயர்ந்து விழுந்தது அரசு பள்ளிக்கட்டடம்: நடவடிக்கை கோரிய கிராம மக்கள்

4 ஆண்டில் பெயர்ந்து விழுந்தது அரசு பள்ளிக்கட்டடம்: நடவடிக்கை கோரிய கிராம மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.63 கோடி ரூபாயில் நான்கு ஆண்டுக்கு முன் கட்டிய பள்ளிக்கட்டடம், மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. ஒப்பந்தாரர் மீது நடவடிக்கை கோரி, கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பனையடியேந்தல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இதன் கட்டடம், 2021ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விட்டது. இதில், பள்ளிக்குழந்தைகள் இருவர் காயம் அடைந்துள்ளனர்.கட்டி முடித்து நான்கு ஆண்டுகளிலேயே மேற்கூரை பெயர்ந்து விழும் அளவுக்கு தரம் இன்றி பள்ளிக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. உப்பு நீரை பயன்படுத்தியும், தரமற்ற மணல் பயன்படுத்தியும் கட்டடம் கட்டியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.இப்படி மோசமாக கட்டிய கட்டட ஒப்பந்ததாரர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில், இன்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Matt P
மார் 18, 2025 09:51

அமைச்சர்கள் வீடுகள் சட்ட மன்றம் எல்லாம் திடமாக இருக்க்குமே. ஏழை மாணவர்கள் வாழ்க்கையில விளையாடனும் என்று தீர்மானமா தான் இருக்காஙக போலிருக்கு. இதுக்கு தான் அவனுக புள்ளைகளை பெரிய பள்ளிக்கூடத்தில வைக்கானுக போலிருக்கு.


अप्पावी
மார் 18, 2025 09:03

மொத்தமா மணலாலேயே கட்டியிருப்பாங்களோ? நாப்பது பர்சண்ட் அமைச்சர்களுக்கு அழுது, மீதிலே பத்து பான்ஹ்சு பர்சண்ட் அதிகாரிகளுக்கு அழுது, அப்புறம் லோக்கல் கழக கவுன்சிலர், கணமணிகளுக்கு எலும்ப் துண்டு வீசி, மீதிப் பணத்தில் கட்டடம் கட்டுனா இப்பிடித்தாண் இருக்கும். தோ இதே கட்டிடத்தை வேற ஒருத்தன் அடுத்த நாலு வருசத்தில் இடிஞ்சு விழற மாதிரி கட்டுவான் பாருங்க.


Dharmavaan
மார் 18, 2025 07:20

மவுண்ட் ரோட்டிலோ ஹிக்கின்ஸ் போதொம்ஸ போன்ற கட்டிடங்கள் 180 வருடமே தாண்டி வலுவாக இருக்கின்றன


Matt P
மார் 18, 2025 06:41

இதுவும் கழக அரசுகளின் சாதனை தானா?


RAMKUMAR
மார் 18, 2025 05:07

இது அதிமுக காலத்தில் கட்டப் பட்டது . எனவே அதிமுக , திமுக இரண்டுமே சம காலா திருடர்கள்


Mani . V
மார் 18, 2025 04:47

நாலு வருடம் தாக்குப் பிடித்ததே ஒரு சாதனைதான். மாடல் ஆட்சியில் கட்டிக் கொண்டு இருக்கும் பொழுதே விளையாட்டு அரங்க கூரை இடிந்து விழும். பல கோடி ரூபாயில் கட்டிய தடுப்பணை ஒரு மாதத்தில் தற்கொலை செய்து கொள்ளும். பாலங்கள் தண்ணியோடு போய் விடும். இது இன்னும் உயிரோட இருப்பதற்கு மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.


Bala
மார் 18, 2025 03:39

எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாத திராவிட மாடல் அரசு


Bala
மார் 17, 2025 21:31

ஆமா டாஸ்மாக் ல இவ்வளவு வருமானம் வருதே என்னதான் திமுக அரசு அந்த பணத்தை வச்சுக்கிட்டு செய்யுது? ஒழுங்கா அரசு பள்ளிகளை சீரமைக்கும் பணிய செய்ங்க அத விட்டுட்டு இந்தி எதிர்ப்பு ரூ ரான்னு தேவையில்லாத பேச்சு பேசறீங்க


C.SRIRAM
மார் 17, 2025 21:30

சிவகங்கை சீமான் எங்கே ?. மாநில அரசு செய்யும் எல்லா வேலைகளும் இப்படி தான் . மாநில அரசு அலுவலகங்களும் ஊழல் மயம். வரிசெலுத்தவருக்கு தான் கட்டிய வரியால் அரசியல் நாடு வளர்ச்சியடையும் என்கிற நம்பிக்கையே இல்லை . பணம் மற்றும் பொருளாராதரம் வீணடிப்பு . சமீபத்திய மற்றொரு உதாரணம் ஸ்மார்ட் சிட்டி ப்ராஜெக்ட் .


உங்க ஊர்தான்
மார் 17, 2025 21:11

உங்கள் ஊருக்கு மட்டும் ஓட்டுக்கு 5000ரூ