உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்

முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அரசு பள்ளி மாணவியரை விமான பயணம் அழைத்து சென்ற முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் காரமடை சிக்காரம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன். இவர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் இருந்து சென்னைக்கு அரசு பள்ளி மாணவ- மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்று வருகிறார்.இந்த ஆண்டு கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றார். மேலும், தோலம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பரளி அரசு உயர்நிலைபள்ளியில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களையும் அழைத்து சென்றார். கடந்த 5 ஆண்டுகளில் கல்வி சுற்றுலாவில் 16 குழுக்களாக 850 மாணவ, மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்று ஞானசேகரன் கனவை நினைவாக்கி உள்ளார். தங்கள் நீண்ட நாள் கனவு இந்த பயணத்தின் மூலம் நிறைவேறி விட்டதாக விமானத்தில் பறந்த மாணவ மாணவியர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.இது குறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறுகையில், 'ஏழை மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களின் கனவை என்னால் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறேன்,' என்றார்.ஆசிரியர்கள் கூறியதாவது: சிக்காரம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஞானசேகரன் ஆண்டுதோறும் 10ம் வகுப்பு அரசு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.ஆண்டுதோறும் மாணவர்களுக்கு சீரூடை, நோட்டு, புத்தகம் வழங்கி வருகிறார். தற்போது 5வது ஆண்டாக மாணவர்களை விமானத்தில் தனது சொந்த செலவில் அழைத்து செல்கிறார்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anantharaman Srinivasan
ஜூலை 08, 2025 15:16

ஞானசேகரனுக்கு ஆண்டுதோறும் இதுபோல் செலவு செய்ய பணம் எங்கிருந்து வருகிறது.? அதுதெரிந்தால் உண்மையில் இவரை மனம் குளிர பாராட்டலாம்.


Senthoora
ஜூலை 08, 2025 17:04

செய்பவர்கள் மனம் குளிர பண்ணுங்க, அவரின் செயலை, பணத்தை புலனாய்வு கவனிக்கும்.


சிவராமகிருஷ்ணன்
ஜூலை 08, 2025 11:18

வாழ்த்துகள்


தமிழ் நாட்டு அறிவாளி
ஜூலை 08, 2025 11:18

வாறன் பஃபெட் தான் பங்கு சந்தையில் சம்பாதித்தை மக்களிடம் திருப்பி கொடுப்பார். ஏனனில் அது மக்கள் பணம். எனக்கு தெரிந்த வரை தன தகுதிக்கு மேல் வந்த பணம் என ஒருவர் உணரும் போது ஒன்று தானம் செய்வார், இல்லை கோவில் உண்டியலில் போடுவார். இது இரண்டும் இல்லையெனில் தனக்கு பெருமை சேர்த்துக்கொள்ள வந்த பணத்தில் கொஞ்சம் தானம் செய்வார். இது ஏதுவாகினாலும் ஏழைமக்களுக்கு பணம் சென்றால் நன்மையே. ஏனனில் அவர்களும் இந்த சமுதாயத்தில் உனக்கு நிகராக வாழ தகுதி உடைவார்கள். அவர்கள் வீழ்ந்தற்கு நீ, நான், இந்த அரசியல், சமுதாயம் என எல்லாம்தான் காரணம்


தத்வமசி
ஜூலை 08, 2025 11:05

வாழ்த்துக்கள். விமானத்தில் பறப்பது என்பது அனைவருக்கும் கனவு தான். நன்றாகப் படித்து உயர்ந்த கல்வி நிலையங்களில் கல்வி பயின்று நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும். இவர்கள் அதிகாரிகளாக வரும் போது ஊழலை ஒழிக்க வேண்டும். இதுவே இவர்கள் செய்யும் பிரதி உபகாரம்.


முக்கிய வீடியோ